Aran Sei

விவாதமின்றி நிறைவேற்றப்படும் சட்டங்கள் – நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளி

பெகசிஸ் ஒட்டு கேட்பு விவகாரம் மற்றும் விவசாயிகள் போரட்டம் குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதன்கிழமை (28.07.2021) விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மக்களவையில் எதிர்கட்சியினர் காகிதங்களைக் கிழித்து எறிதல், சபாநாயகர் மற்றும் கருவூல மேஜைகள் அருகே எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டிருந்ததற்கு மத்தியில் திவால் விதிகள் திருத்த மசோதா 2021 உள்ளிட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

‘கல்வி,வேலைவாய்ப்பில் இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டையும் உயர்த்த வேண்டும்’ – தமிழ்நாடு அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை

சபாநாயகர் ஓம் பிர்லா, கேள்வி நேரத்தை முடித்ததைத் தொடர்ந்து அவை நடத்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திர அகர்வால் முயற்சித்த நிலையில், காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் ஆவணங்களை கிழித்து காற்றில் வீசியுள்ளனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் குர்ஜீத் அஜ்லா, டி.என். பிரதாபன், மாணிக்கம் தாகூர், ரவ்னீத் சிங் பிட்டு, ஜோதிமணி, சப்தகிரி சங்கர் உலாகா ஆகியோர் மீது பதவியை அவமதித்தற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருவூல இருக்கைகள் கோரின.

‘மோடிக்கும் இந்தியாவிற்கும் இடையிலான 2024 நாடாளுமன்ற தேர்தலில், நாட்டை மாநில கட்சிகள் வழிநடத்தும்’ – மம்தா பானர்ஜி

மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, கேள்வி நேரம் நிறைவடைந்ததை தொடர்ந்து அவை பல முறை ஒத்தி வைக்கப்பட்டது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்