Aran Sei

‘இந்தியாவில் மத சிறுபான்மையினர் மீதான வன்முறைகள் கவலை அளிக்கிறது’ – சிஏஏ, மதமாற்ற தடை சட்டம் குறித்து அமெரிக்கா அறிக்கை

மெரிக்காவின் 2020 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்த அறிக்கை, இந்தியாவில் மதம் மற்றும் இன சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் மற்றும் வன்முறைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை தயாரித்துள்ள இந்த அறிக்கையானது, இரு அவைகளைக் கொண்டு அமெரிக்க நாட்டின் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில், “குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) குறித்த இஸ்லாமிய சமூகத்தின் கவலைகள், வெளிநாட்டு நிதி பங்களிப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை அடுத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் இஸ்லாமியர்கள்தான் கொரோனா தொற்றை பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் ஆகிய பிரச்சனைகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டுள்ளது.” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மங்களூர்: சிஏஏ போராட்டத்தின் ஓராண்டு நிறைவு – இன்றும் அச்சத்தில் வாழும் இஸ்லாமியர்கள்

மேலும், மத ரீதியாக தூண்டிவிடப்பட்ட கொலைகள், தாக்குதல்கள், கலவரங்கள், தீண்டாமைகள், காழ்ப்புணர்ச்சிகள் மற்றும் தனிநபர்கள் தங்கள் மத நம்பிக்கைகளைப் பற்றி பேசுவதற்கான உரிமையை பறிக்க முயலும் நடவடிக்கைகள் பற்றியும் அறிக்கையில் விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 28  மாநிலங்களில் குறைந்தது 10 மாநிலங்களிலாவது, தனிநபர்களின் மத மாறும் உரிமையை கட்டுப்படுத்தும் சட்டங்கள் உள்ளன என்று அமெரிக்க வெளியுறவுத்துறையின் சர்வதேச மத சுதந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Source; new indian express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்