Aran Sei

இந்தியத் தடுப்பூசியான கோவிஷில்ட் தயாரிப்பிற்கு மூலப்பொருட்கள் வழங்கத்தடை – அமெரிக்கா அரசு அறிவிப்பு

ந்தியாவின் பயன்பாட்டில் உள்ள கோவிஷில்ட் தடுப்பூசி தயாரிப்பிற்கு தேவையான மூலப்பொருட்களைத்  சீரம் இந்தியா நிறுவனத்திற்கு வழங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க இயலாது என்று அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது.

சீரம் இந்தியா தலைமை செயல் அதிகாரி பூனாவாலா இந்தத் தடையை நீக்கக் கோரியிருந்தார். இந்நிலையில் அமெரிக்கா அரசு முடியாது என்று தெரிவித்துள்ளது.

கடைசி தீர்வு ஊரடங்கு என்று அறிவுரை கூறும் பிரதமரே; முதல் தீர்வான தடுப்பூசியை முதலில் முறையாகச் செயல்படுத்துங்கள்- சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

இதுகுறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர், “பைடன் அரசின் முதன்மை நோக்கம் அமெரிக்க மக்களுக்கான தேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பது தான்” என்று தெரிவித்துள்ளார்.

“பாஜக இந்நாட்டைவிட்டு அகற்றப்படும் போதுதான் நாட்டிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அர்த்தம்” – நடிகர் சித்தார்த்

இந்நிலையில், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ரசாயன அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்த அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள், இந்தியாவில் தடுப்பூசி தயாரிப்பாளர்கள் குழு (பூனவல்லா உட்பட) மற்றும் அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்தியாவின் தூதர்கள் ஆகியோருடன் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பது குறித்து கூட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்.

SOURCE; THE INDIAN EXPRESS

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்