Aran Sei

`உள்ளே கர்ப்பிணிப் பெண்; உயிரைக் காப்பாற்றுங்கள்’ – வேல் யாத்திரையால் சிக்கிய ஆம்புலன்ஸ்

டையை மீறி பாஜக செய்து வரும் வேல் யாத்திரையில் ஏற்பட்ட வாகன நெரிசலால், கர்ப்பிணிப் பெண்ணை ஏற்றிச்சென்ற ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு செல்லமுடியாமல் சிக்கிகொண்டதாக மாலை முரசு தொலைகாட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக பாஜக சார்பில், கட்சியின் தலைவர் எல்.முருகன் தலைமையில் `வெற்றிவேல் யாத்திரை’ நவம்பர் 6 முதல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. திருத்தணியில் தொடங்கி, திருச்செந்தூரில் நிறைவடையும்படி இந்த யாத்திரை திட்டமிடப்பட்டிருந்தது. இந்த யாத்திரையை டிசம்பர் 6-ம் தேதி வரை நடத்தவிருப்பதாக முருகன் அறிவித்திருந்தார். அதற்கான அனுமதியைக் கோரி டிஜிபி, மாவட்ட எஸ்.பிக்களிடம் கடிதம் அளிக்கப்பட்டது.

`கர்ணம் அடித்தாலும் பாஜக கால் ஊன்ற முடியாது’ – தா.பாண்டியன்

நவம்பர் 4-ம் தேதி, வேல் யாத்திரைக்குத் தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் பாலமுருகன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் தனித்தனியாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

நவம்பர் 5-ம் தேதி “வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை” என நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

`பாஜகவின் வரலாறே வன்முறை வரலாறுதான்’ – வேல்முருகன் காட்டம்

இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தலைமையிலான அமர்வு, “தடை குறித்த விவரங்களைப் பாஜகவுக்குத் தமிழக அரசு தெரிவிக்கும்” என்கிற அடிப்படையில் வழக்கை முடித்து வைப்பதாக உத்தரவிட்டனர்.

நவம்பர் 6 ஆம் தேதி காலை, சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில், பாஜக மாநிலத் தலைவர் முருகனிடம் தடையை மீறி வேல் யாத்திரை நடத்தப்படுமா எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “துள்ளி வரும் வேல்” என்று அவர் பதிலளித்தார்.

`வேல் துள்ளி வரும்’ VS ’சட்டத்தை மீறினால் நடவடிக்கை’

அதைத் தொடர்ந்து, அன்றைய தினமே திருத்தணியில் வேல் யாத்திரையை தடையை மீறி நடத்த முயன்றார். அப்போது காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின் எல்.முருகன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், நவம்பர் 8 ஆம் தேதி, சென்னையில் எல்.முருகன் தலைமையில் பாஜகவினர் வேல் யாத்திரை சென்றனர். அவர் சென்ற வாகனத்தைப் பின் தொடர்ந்து, பயணித்த வாகனங்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அண்ணா ஆர்ச், பச்சையப்பன் கல்லூரி, எழும்பூர், சென்ட்ரல் வழியாக திருவொற்றியூர் சென்றடைந்துள்ளது.

`நாவை அடக்கிப் பேசுங்கள்’ – பாஜகவிற்கு ஆதித்தமிழர் பேரவை எச்சரிக்கை

இதனால், பூந்தமல்லி சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சியைப் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்த நிகழ்வு குறித்து மாலை முரசு தொலைகாட்சி பிரத்தியேகமாக வீடியோ ஒன்றை வெளிட்டது. அதில், ஆம்புலன்ஸில் இருந்த உறவினர்கள் கீழே இறங்கி, போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கும், ஆம்புலன்ஸை உடனடியாகப் பயணிக்க வழிவகை செய்யுமாறு முறையிட்டுள்ளனர். அப்போது, அவர்களில் ஒருவர் “உள்ளே கர்ப்பிணிப் பெண் இருக்கிறார். ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றுங்கள்” என்று காவல்துறையினரிடம் கெஞ்சியுள்ளார்.

தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்கிறது பாஜக – திருமாவளவன் குற்றச்சாட்டு

இது குறித்து, பாஜக மாநில தலைவர் எல்.முருகனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “எங்களது வாகனங்களையே போலீசார் அனுமதிக்கவில்லை. அந்த ஆம்புலன்ஸ் எங்களோடு வந்த வாகனம்.” எனக்கூறியுள்ளார். தொடர்ந்து அந்தச் சம்பவம் பற்றி விரிவாகக் கேட்ட பொழுது “சும்மா கேள்வி கேட்கணும்னு கேட்கக் கூடாது.” என்று கோபமாகச் சொல்லிவிட்டு நகர்ந்துள்ளார்.

வேல் யாத்திரை, மதநல்லிணக்கத்திற்கு எதிரானது என்று கூறி, இதற்குத் தடை விதிக்க வேண்டும் எனத் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சித் தலைவர்கள் குரல் கொடுத்து வந்தனர்.

பாஜகவால் `வேல்’ ரத்தம் சிந்தக்கூடியதாக மாறும் – கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேல்யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் “யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு, மருத்துவர்கள், பல துறை ஊழியர்கள் எடுத்து வரும் அனைத்து முயற்சிகளும் வீணாகும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்