Aran Sei

மகராஷ்டிராவில் ஒரே ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லப்பட்ட இறந்த 22 உடல்கள்: ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் நேர்ந்த அவலம்

காராஷ்டிரா மாநிலத்தில் போதிய ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் கொரோனா தொற்றால் இறந்த 22 பேரின் உடல்களை ஒரே ஆம்புலன்ஸில் வைத்து அடைத்து மயானத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘உ.பியில் ஆம்புலன்ஸ், படுக்கை இல்லாமல் மரணிப்பவர்களுக்கு சுடுகாட்டில் கூட இடமில்லாத அவலம்’ – அகிலேஷ் குற்றச்சாட்டு

அம்பாஜோகை பகுதியில் சுவாமி ராமானந்த அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து இறுதி சடங்குகளுக்காக கொரோனா தொற்றால் பாதிப்படைந்த 22 பேரின் உடலும் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம்குறித்து தெரிவித்துள்ள அந்த மருத்துவக்கல்லூரியின் முதல்வர் சிவாஜி சுக்ரே, போதிய ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லாததாலே இவ்வாறு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போட்டு கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் 18 மணி நேரத்தில் மரணம் : தடுப்பூசி காரணமில்லை என விளக்கம்

மேலும், கொரோனா முதல் அலையின்போது 5 ஆம்புலன்ஸ் இருந்ததாகவும் தற்போது இரண்டு மட்டுமே உள்ள நிலையில் பற்றாக்குறை உள்ளதாகவும், ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது குறித்து கடந்த மார்ச் 17 அன்றே மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளதாகவும் சிவாஜி சுக்ரே கூறியுள்ளார்.

source; the new indian express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்