Aran Sei

அம்பேத்கர் சாதிய முறையை முற்றிலும் அழிக்க விரும்பினார், ஆனால் சுதந்திரத்திற்கு முன்பு இருந்ததை விட இப்போது சாதிய உணர்வு அதிகரித்துள்ளது – காங்கிரஸ் எம்.பி சசிதரூர்

சுதந்திரத்திற்கு முன்பு இருந்ததைவிட இப்போது சாதிய உணர்வு அதிகரித்து உள்ளது என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் கூறியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியை தழுவிய சசிதரூர் நேற்று மும்பையில் நடந்த டாடா இலக்கிய திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் தான் எழுதிய அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட்டார்.

அந்நிகழ்வில் பேசிய சசிதரூர், “அம்பேத்கர் சாதிய முறையை முற்றிலும் அழிக்க விரும்பினார். ஆனால் தற்போது அரசியல் கட்சிகளில் சாதிய அமைப்புகள் ஆழமாக வேரூன்றும் என்பதை உணர்ந்து இருந்தால் அவர் அதிர்ச்சி அடைந்து இருப்பார். தீண்டாமை, பாகுபாட்டுக்கு எதிரான அரசியல் கட்சிகள் சாதிப் பெயரைச் சொல்லித் தான் ஓட்டு கேட்கின்றன.

சாதிய அமைப்பு அழிக்கப்படுவதிலிருந்து மிகத் தொலைவில் உள்ளது. நவீனமயமானால் சாதி ஒழியும் என அம்பேத்கரும், நேருவும் நினைத்தார்கள். சுதந்திரத்திற்கு முன் இருந்ததைவிட இப்போது சாதிய உணர்வு மிகப்பெரிய அளவில் அதிகரித்து உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Source : the print

Pesu Tamizha Pesu Rajavel Nagarajan Ignorant about History I Kamraj Social Justice Class | EWScaste

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்