Aran Sei

சமூகம், சட்டம், கல்வி, பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம் என அனைத்துக்குமான ஒரே அடையாளம் அம்பேத்கர் – மு.க.ஸ்டாலின் புகழாரம்

மூகம், சட்டம், கல்வி, பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம் என அனைத்துக்குமான ஒரே அடையாளம் அம்பேத்கர் மட்டுமே என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்ணல் அம்பேத்கரின் 130-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பெரியாரின் பெயரை நீக்கிய நெடுஞ்சாலைத்துறை: மதவெறி கூட்டத்தின் கால்பணிகிறதா அதிமுக – ஸ்டாலின் கேள்வி

இந்தியா முழுவதும் வாழும் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அனைத்துக்குமான ஒளிவிளக்காகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடித்துக் கொடுத்து அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு அணையா விளக்காகவும் அம்பேத்கர் திகழ்வதாக மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் , “சமூகம், சட்டம், கல்வி, பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம் அனைத்துக்கும் ஒருசேர ஒருவரை அடையாளம் காட்ட முடியுமானால் அது டாக்டர் அம்பேத்கராகத்தான் இருக்க முடியும். இத்துறைகள் அனைத்திலும் முத்திரை பதித்தவர் மட்டுமல்ல, இத்துறைகளின் திசைகளைத் திருப்பியவரும் அவரே” என்றும் திமுக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

மம்தாவின் பரப்புரைக்கு தடை: சார்பின்மை மற்றும் நடுநிலையை கடைப்பிடிப்பதை தேர்தல் ஆணையம் உறுதிசெய்திட வேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்

அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு, குடிமக்களின் உரிமைகளுக்குப் பலவகைகளில் பாதுகாப்பைத் தந்து வருவதாகவும் , சட்டம் என்பதற்கும் மேலாக ‘மிகச்சிறந்த சமூக ஆவணம்’ என்று போற்றப்படுவதாகவும், அதற்கு அம்பேத்கரின் சமூகச் சிந்தனையே காரணமாக உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின்  குறிப்பிடப்பட்டுள்ளார்.

மேலும், “தனக்குத் தலைவராக இருக்கும் தகுதி படைத்தவர் அம்பேத்கர்” என்று தந்தை பெரியார் கூறியுள்ளதையும் திமுக தலைவர் தனது அறிக்கையில் நினைவுகூர்ந்துள்ளார்.

விவசாயிகளின் வாழ்வில் கண்ணாமூச்சி ஆடும் மோடியை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் – ஸ்டாலின்

இதைத்தொடர்ந்து பாஜகவின் செய்லபாடுகள் குறித்து குறிப்பிட்டுள்ள ஸ்டாலின் “அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்பைச் சிதைக்க, பா.ஜ.க. அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் அம்பேத்கரின் சட்டக் கட்டமைப்பை அவர்களால் அசைக்க முடியவில்லை” என்றும் கூறியுள்ளார்.

ஐநா மனித உரிமைகள் மன்றம் – ‘ தேர்தல் நடப்பதால் புறக்கணிப்பு; இல்லாவிட்டால் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்திருக்கும்’ : ஸ்டாலின், வைகோ

அம்பேத்கர் பிறந்த தினத்தில், விழிப்பான உணர்வுநிலையில் தனது உரிமைகள், பொறுப்புகள் மற்றும் கடமைகளை யார் உணர்ந்திருக்கிறார்களோ, அவர்களே சுதந்திரமான மனிதர்கள் என்று கூறிய அம்பேத்கரின் வழியில் அத்தகைய சுதந்திரமான சிந்தனை கொண்ட மனித சமுதாயம் அமைக்க உறுதி ஏற்போம் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்