உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் உக்ரைன் ராணுவத்தால், மக்களாலும் தாக்கப்படுவதாகக் கூறியுள்ள நிலைமையில் இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா, உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று இந்தியாவை வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் வெளியுறவு துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகாவை சந்தித்து, உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை அங்கிருந்து வெளியேற்ற உக்ரைனின் உதவியைக் கோரியிருந்தார்.
பாகுபாடு காட்டும் உக்ரைனிய அதிகாரிகள் – இந்திய மாணவர்கள் குற்றச்சாட்டு
இந்நிலையில், உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்றால் எங்களது நட்பு நாடுகள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவர்களுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை விளாடிமிர் புடினால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்றும் இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு நாங்கள் உதவுகிறோம். ஆனால் நாங்கள் போரில் ஈடுபட்டு வருவதால் எங்களது சக்திகள் குறைவாகவே உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.
Source : New Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.