Aran Sei

போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட இந்தியப் பணக்காரர்களின் தரவரிசை – முதலிடத்தில் அம்பானி இரண்டாம் இடத்தில் அதானி

2022 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோர் முறையே இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 1 மற்றும் 2வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு கொரோனா பேரிடர் இருந்தாலும் கூட உலகெங்கிலும் உள்ள பணக்கார்ர்களின் வருடாந்திர தரவரிசை பட்டியலில் பல இந்தியர்கள் இருந்தனர்.

இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியல்

  1. முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரான அம்பானி, 90.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராகவும், உலகின் பத்தாவது பணக்காரராகவும் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.

நவராத்திரியில் கறிக் கடைக்கு தடை விதித்த டெல்லி மேயர் – நாடு முழுதும் தடைவிதிக்க பாஜக எம்.பி., வேண்டுகோள்

  1. கௌதம் அதானி மற்றும் குடும்பம்

ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான அதானி, உள்கட்டமைப்பு மற்றும் பண்டங்களின் கூட்டுக்கு தலைமை வகிக்கிறார். இவரின்  நிகர மதிப்பு $90 பில்லியன் டாலர் ஆகும். உலக தரவரிசையில் 11வது இடத்தில் உள்ளார்.

  1. ஷிவ் நாடார்

HCL டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனரான ஷிவ் நாடார், இந்திய பணக்காரர் வரிசையில் மூன்றாமிட்த்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்துக்கள் 22 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஃபோர்ப்ஸ் செய்திப்படி அவரின்  நிகர சொத்து மதிப்பு $28.7 பில்லியன் டாலர் ஆகும். உலக தரவரிசையில் 47வது இடத்தில் உள்ளார்.

  1. சைரஸ் பூனவல்லா

கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்த செரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவுக்குப் பின்னால் இருந்தவர் பூன்வாலா.  தனது செல்வத்தை இருமடங்காக 24.3 பில்லியன் டாலர்களாக உயர்த்தியுள்ளார்.  மேலும் அவரது முந்தைய தரவரிசையில் இருந்து நான்கு இடங்களுக்கு முன்னேறியுள்ளார். உலக தரவரிசையில் 56வது இடத்தில் உள்ளார்.

பெங்களூரு விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட அம்னெஸ்டி இந்தியா தலைவர் – வழக்கு பதிந்திருப்பதால் வெளிநாடு செல்ல தடை என சிபிஐ விளக்கம்

  1. ராதாகிஷன் தமானி

உலக அளவில் 81வது இடத்தில் உள்ள தமானி, நாடு முழுவதும் டி-மார்ட்களை இயக்கும் அவென்யூ சூப்பர் மார்க்கெட்களை நிறுவி, 20 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார்.

  1. லட்சுமி மிட்டல்

உலகின் மிகப்பெரிய எஃகு மற்றும் சுரங்க உற்பத்தி நிறுவனமான ஆர்செலர் மிட்டலின் தலைவரான லக்ஷ்மி மிட்டலின் நிகர மதிப்பு $17.9 பில்லியன் டாலர் ஆகும். உலக அளவில் 89வது இடத்தில் உள்ளார்.

  1. சாவித்ரி ஜிண்டால் மற்றும் குடும்பம்

OP ஜிண்டால் குழுமத்தின் எஃகு மற்றும் சக்தி நிறுவனமான சாவித்ரியின் நிகர சொத்து மதிப்பு $17.7 பில்லியன் டாலர் ஆகும். உலக அளவில் 91வது இடத்தில் உள்ளது. முதல் 10 பணக்கார இந்தியர்களில் உள்ள ஒரே பெண் இவர் மட்டும்தான். பில்லியனர்கள் பட்டியலில் உள்ள 13 இந்திய பெண்களில் ஒருவர் சாவித்ரி ஜிண்டால்.

டெல்லியில் நவராத்திரியின் போது கறிக்கடைக்கு தடை – அரசியல் சட்டத்திற்கு எதிரானதென மெஹுவா மொய்த்ரா விமர்சனம்

  1. குமார் பிர்லா

ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர், உலகப் பணக்கார வரிசையில் 109 வது இடத்தில் உள்ளார்.  இவரின் நிகர சொத்து மதிப்பு $16.5 பில்லியன் டாலர் ஆகும்.

  1. திலீப் ஷங்வி

உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்.  உலகப் பணக்கார தரவரிசையில் 115 வது இடத்தில் இருப்பவர். இவரது சொத்து மதிப்பு $15.6 பில்லியன் டாலர் ஆகும்.

  1. உதய் கோடக்

கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோடக் 10வது இடத்தில் உள்ளார். இவரை “இந்தியாவின் சுயமாக உருவான பணக்கார வங்கியாளர்” என்று போரப்ஸ் அழைக்கிறது. உலக அளவில் 129வது இடத்தில் உள்ளார். இவரது நிகர மதிப்பு $14.3 பில்லியன் டாலர் ஆகும்.

Source: indianexpress

மக்களுக்கு இலவசங்களைக்  கொடுத்தால் நாடு திவாலாகி விடுமா?

பாஜகவின் பொய்யை கட்டுடைக்கும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பால சந்திரன்

மேலும் தெரிந்துகொள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்