பொதுச்சொத்துக்களை தனியார் முதலாளிகளுக்கு விற்கும் மத்திய அரசின் முடிவிற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி வெளியிட்டுள்ள அறிக்கையில், “போலி தேச பக்தர்களான இந்துத்துவ பாசிசவாதிகள் நாட்டை ஒரு வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாக மாற்றுகிறார்கள்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒன்றிய அரசு அறிவித்துள்ள தேசிய சொத்துக்களை பணமாக்கும் (National Monetasation Pipeline Project) திட்டமானது, பொதுத் துறை சொத்துக்களை தனியாரிடம் குத்தகைக்கு விடுவதன் மூலம் ரூ.6 லட்சம் கோடியை திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தனியார் நிதி திரட்டலுக்காக சென்னை, போபால், வாரணாசி, வதோதரா ஆகிய இடங்களில் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் உள்ள கிட்டத்தட்ட 25 விமான நிலையங்கள், 40 ரெயில்வே நிலையங்கள், 15 ரெயில்வே மைதானங்கள் மற்றும் ஏராளமான ரெயில்வே காலனிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்தாக எஸ்.டி.பி.ஐ. தலைவர் தெரிவித்துள்ளார்.
சொத்துக்கள் “விற்கப்படவில்லை” என்றும், அவற்றின் உரிமை அரசாங்கத்திடம் இருக்கும் என்றும் நிதி அமைச்சர் அறிவித்திருந்தாலும், இதுவரை பொது சொத்துக்களை பெரு நிறுவனங்களுக்குத் தாரை வார்த்த அரசின் நடைமுறையை வைத்து பார்க்கும் போது நிதியமைச்சரின் வார்த்தைகளை நம்ப முடியாது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
”மக்கள் விரோத பாசிச அரசாங்கம் ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் மற்றும் நாட்டின் நலனில் சிறிதும் அக்கறை காட்டவில்லை. மதத்தின் பெயரால் பிரிவினையை உருவாக்கிப் பெருநிறுவனங்களுக்கு ஊட்டமளிப்பதே இந்த அரசின் ‘வளர்ச்சி’ செயல்பாடுகளாக உள்ளன” என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டை நிர்வகிக்கும் தனது கடமையை மறந்துவிட்ட அரசு, தேசத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் முதல் தர ரியல் எஸ்டேட் முகவராக மாறியுள்ளது என்று அறிக்கையில் கூறிய அவர், போலி தேசபக்தி முகமூடி அணிந்த அரசும், அதன் உந்து சக்தியான ஆர்.எஸ்.எஸ்ஸும் நாட்டை விற்று பணம் சம்பாதிக்கின்றன.” என அவர் தெரிவித்தார்.
உண்மையான தேச பற்றாளர்கள் விழித்தெழுந்து பாசிச அரசை ஆட்சியில் இருந்து அகற்றாவிட்டால் அதானி, அம்பானிகளின் தனியார் நிலங்களில் நாம் அவர்களுக்கு வாடகை செலுத்தி வாழ வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.பைஸி எச்சரிக்கை விடுத்த்ய்ள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.