Aran Sei

அமேசானில் தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சி தோல்வி – நிர்வாகத்தின் சூழ்ச்சி என்று வணிகர்கள் சங்கம் குற்றச்சாட்டு

மேசான் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்கும் நடவடிக்கைக்கு எதிராக அமேசான் பணியாளர்கள் வாக்களித்துள்ளதால், தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது என அமெரிக்கா தொழிலாளர் நல வாரியம் அறிவித்துள்ளது.

அலபாமாவில் உள்ள அமேசான் கிடங்கில் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தொழிற்சங்கம் அமைப்பது குறித்து தொழிலாளர்களிடம் தேர்தல் நடத்தப்பட்டிருந்தது.

இடைவேளை இல்லாததால் பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அமேசான் ஊழியர்கள் – ஆர்கனைஸ் அறிக்கையில் தகவல்

நேற்றைய தினம் எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் அதன் முடிவுகள் வெளியாகி இருக்கிறது.

கடந்த ஏப்ரல் 8 அன்று எண்ணிமுடிக்கப்பட்ட சரிபாதி வாக்குகளில் 1100 பணியாளர்கள் சங்கம் அமைப்பதற்கு எதிராகவும், 463 தொழிலாளர்கள் ஆதரவாகவும் வாக்களித்திருந்தனர்.

தொழிற்சங்கத்தை கண்டு அச்சம் கொள்கிறதா அமேசான்? – பணியாளர்களின் ஒற்றுமையைச் சிதைப்பதாக குற்றச்சாட்டு

இந்நிலையில், அலபாமாவில் உள்ள அமேசான் கிடங்கில் பணிபுரியும் தொழிலாளர்களில் 1,798 பேர் சங்கம் அமைப்பதற்கு எதிராகவும், 738 சங்கத்திற்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளதாக அமெரிக்கா தொழிலாளர் நல வாரிய ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த முடிவுகள் குறித்து தெரிவித்துள்ள சிறுகுறு வணிகர்கள் சங்கம், அமேசான் நிறுவனம் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்திற்கு எதிராக வாக்களிக்க அழுத்தம் தந்ததாகவும்,தொழிலாளர்களை மீண்டும் ஒருங்கிணைக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தொழிலாளர் உரிமைகளுக்காக போராடிய ஊழியர்கள்- பணிநீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

அமேசான் நிறுவனத்தின் ஊழியர்களுக்குப் பணியின்போது சரிவர இடைவேளை தராததால் பெரும்பாலான ஊழியர்கள் காலியான பாட்டில்களில் சிறுநீர் கழித்து வருவருவதாக ஆர்கனைஸ் (ORGANISE) என்ற தொழிலாளர்களுக்கான  அமைப்பு அறிக்கை ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டிருந்தது கவனிக்கத்தக்கது.

SOURCE; REUTERS

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்