Aran Sei

தொழிற்சங்கத்தை கண்டு அச்சம் கொள்கிறதா அமேசான்? – பணியாளர்களின் ஒற்றுமையைச் சிதைப்பதாக குற்றச்சாட்டு

மேசான் நிறுவனத்தில் தொழிற்சங்கம் அமைக்கும் நடவடிக்கைக்கு எதிராக அமேசான் நிறுவனம் செயல்பட்டுவருவதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அலபாமாவில் உள்ள அமேசான் கிடங்கில் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகத் தொழிற்சங்கம் அமைப்பது குறித்து தொழிலாளர்களிடம் தேர்தல் நடத்தப்பட்டது.

அமேசான் நிறுவனத்தில் உருவாகிறதா தொழிற்சங்கம்? – தொழிலாளர்களிடையே இன்று வாக்கெடுப்பு

இந்நிலையில், நேற்று இரவுவரை எண்ணிமுடிக்கப்பட்ட சரிபாதி வாக்குகளில் 1100 பணியாளர்கள் சங்கம் அமைப்பதற்கு எதிராகவும், 463 தொழிலாளர்கள் ஆதரவாகவும் வாக்களித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இன்று காலை 9 மணியளவில் அந்த வாக்குகள் மீண்டும் எண்ணப்படவிருப்பதாகவும் , மொத்தம் 3215 பேர் வாக்களித்துள்ளதாகவும் அமெரிக்கா தொழிலாளர்கள் நல வாரியம் அறிவித்துள்ளதாக தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தொழிலாளர் உரிமைகளுக்காக போராடிய ஊழியர்கள்- பணிநீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

தொழிலாளர்கள் சங்கம் அமைப்பதற்கான தேர்தல் பிரச்சாரத்தின்போது, மூன்று மடங்கு அதிக ஊதியம் தருகிறோம் என்று அமேசன் நிறுவனம் பணியாளர்களுக்கு உறுதியளித்து சங்கத்திற்கு எதிராக மடைமாற்றும் வேலையைச் செய்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிற்சங்கத்திற்கு ஆதரவான தொழிலாளர்கள், அமேசான் கிடங்கின் வெளிப்புறம் உள்ள கதவுகளில் நின்று 6000 தொழிலாளர்களைச் சந்தித்து, தொழிற்சங்கத்தின் தேவை குறித்து விளக்கிக் கூறியதாகவும், அதன் மூலம் கிடைக்கும் நலன்கள் குறித்து தெரிவித்ததாகவும் தி இந்து செய்தி கூறுகிறது.

இடைவேளை இல்லாததால் பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அமேசான் ஊழியர்கள் – ஆர்கனைஸ் அறிக்கையில் தகவல்

அமெரிக்காவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் 9,50,000 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். ஆனால், சங்கம் அமைப்பதற்கான முதல் முயற்சி இதுவேயாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அமெரிக்க அதிபர் ஜோபைடன் தொழிற்சங்க உருவாக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்