Aran Sei

தொழிலாளர் உரிமைகளுக்காக போராடிய ஊழியர்கள்- பணிநீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள், தங்கள்  உரிமைகளுக்காக அந்நிறுவனத்தின் மீது புகாரளித்தவர்களை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க தொழிலாளர் நலத்துறை வாரியம் அறிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இடைவேளை இல்லாததால் பாட்டிலில் சிறுநீர் கழிக்கும் அமேசான் ஊழியர்கள் – ஆர்கனைஸ் அறிக்கையில் தகவல்

அமேசான் நிறுவனம் பணிநீக்கம் செய்த கன்னிங்ஹாம், கோஸ்ட்டா ஆகிய இருவரும் “கொரனோ காலத்தில் அதிக லாபம் ஈட்டுவதற்காக மிக அபாயகரமான சூழலில் தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்” என்று குற்றம் சாட்டியிருந்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,   பணிநீக்கம் குறித்து மறுபரிசீலனை செய்யாவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படமென தொழிலாளர் நலத்துறை வாரியம் சியாட்டிலில் உள்ள அமேசானின் மண்டல அலுவலகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தி இந்து செய்தி கூறுகிறது.

அமேசான் நிறுவனத்தில் உருவாகிறதா தொழிற்சங்கம்? – தொழிலாளர்களிடையே இன்று வாக்கெடுப்பு

 இதுகுறித்து தெரிவித்துள்ள அமேசான் நிர்வாகம் “தொழிலாளர்கள் பணியிட வசதிகளை விமர்ச்சிக்க உரிமை உண்டு. ஆனால், கொள்கை முடிவுகளை மீறும் வகையில் நடந்துக்கொண்டதால் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்” என்று தெரிவித்திருந்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனாலும், அமேசான் நிறுவனம் அதன் கொள்கை முடிவுகள் என்ன என்பது குறித்து  தெளிவாக அறிவிக்கவில்லை என்றும் தி இந்து செய்தி தெரிவிக்கிறது.

” தொழிற்சங்க உரிமையில் முதலாளிகள் தலையிட முடியாது ” – அமேசான் ஊழியர்களுக்கு ஆதரவாக ஜோ பைடன்

 

இந்நிலையில், இதுகுறித்து தெரிவித்துள்ள பன்னாட்டு தொழிற்சங்கத்தின் தலைவர் மார்க் பெரினோ, “உரிமைகளுக்காகப் போராடிய பணியாளர்களைப் பணிநீக்கம் செய்தது தொடர்பாக அமேசான் நிறுவனம் மெளத்தை கலைக்க வேண்டும்” என்று கூறியுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்