Aran Sei

அமெரிக்காவில் உதயமாகும் தொழிற்சங்கங்கள் – அமேசானை தொடர்ந்து ஸ்டார்பக்ஸிலும் தொழிலாளர்கள் யூனியன்

Credit: AP

ப்ரல் 1 தேதி அமெரிக்க தொழிற்சங்கங்களின் வரலாற்றில் ஒரு சிறப்புமிக்க நாளாக அமைந்தது.

உலகின் மிகப்பெரிய வணிக சேவை நிறுவனங்களில் ஒன்றான அமேசானில் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திலும் தொழிற்சங்கம் தொடங்குவதற்கான முயற்சிகள் வெற்றி அடைந்துள்ளன.

தொடர்ந்து சரிவை சந்திக்கும் காங்கிரஸ் கட்சியின் ஆண்டு வருமானம் – தேர்தல் ஆணையம் தகவல்

சர்வீஸ் எம்பிளாய்ஸ் இண்டர்நேஷனல் யூனியன் அமைப்பின் அங்கமாக ஸ்டார்பக்ஸ் ஒர்க்கர்ஸ் யுனைடெட் அமைப்பு சங்கங்கள் அமைப்பதற்கான தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. முதன்முறையாக 2021 டிசம்பர் மாதம் நியூயார்க் மாகாணம்  பஃபலோவில் நடைபெற்ற தேதலில் வெற்றி பெற்றிருந்த நிலையில், அடுத்து நடைபெற்ற 11 தேர்தல்களில் 10 தேர்தல்களில் அந்த அமைப்பு வெற்றி பெற்றுள்ளது. ஸ்டார்பக்ஸ் நிறுவன வரலாற்றில் இத்தகைய வெற்றி இதுவே முதல் முறை.

முன்னதாக அமேசான் நிறுவனத்திற்கு தொழிற்சங்கம் அமைப்பது தொடர்பான தேர்தலில் வெற்றி பெற்று தொழிலாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

மத்தியபிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர் – ஆடைகளை களைந்து அவமானப்படுத்திய காவல்துறையினர்

2020 ஆண்டு கொரோனா பரவலின் போது பணியிடத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என்று போராடியதற்காக பணியில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர் கிறிஸ்டியன் ஸ்மால்ஸ் மற்றும் ஊழியர்கள் போராடியதன் விளைவாக தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் 55 விழுக்காடு ஊழியர்கள் தொழிற்சங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். உலகின் மிகப்பெரிய வணிக சேவை நிறுவனத்தில் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டிருப்பது மிகப்பெரிய  வெற்றியாக பார்க்கப்படுகிறது

Source: The Wire

டாணாகாரன் திரை விமர்சனம்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்