Aran Sei

தாண்டவ் இணையத் தொடரில் எதிர்க்கப்பட்ட காட்சிகள் – அமேசான் பிரைம் நிபந்தனையற்ற மன்னிப்பு

மேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான தாண்டவ் இணையத்தொடரில் பார்வையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த காட்சிகள் நீக்கப்பட்டுவிட்டதாகவும், இது தொடர்பாக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிவதாகவும், அமேசான் பிரைம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சயிப் அலிகான், முகமது ஜீஷன் அயூப் நடிப்பில் வெளியான தண்டவ் இணையத்தொடர் இடம்பெற்ற கல்லூரி காட்சிகள், மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக, சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து அந்தக் காட்சிகள் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டன.

இந்து கடவுள்களை அவமதித்த குற்றச்சாட்டு : தாண்டவ் படக்குழுவினர் மீது வழக்கு

”அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான‘தாண்டவ்’ என்ற கற்பனை தொடரில், இடம்பெற்றிருந்த சில காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது. பார்வையாளர்களை புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல, அந்தக் காட்சிகள் குறித்து எங்கள் கவனத்திற்கு வந்ததும், அவை நீக்கப்பட்டன அல்லது திருத்தப்பட்டன” என அமேசான் பிரைம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

”எங்கள் பார்வையாளர்களின் மாறுபட்ட நம்பிக்கைகளை நாங்கள் மதிப்பளிக்கிறோம், மேலும் இந்தக் காட்சிகளால் யாரும் புண்பட்டிருந்தால், நாங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிகிறோம். எங்கள் குழு கருத்து உள்ளடக்க மதிப்பீட்டு செயல்முறையை பின்பற்றுகின்றது, பார்வையாளர்களுக்குச் சிறந்த சேவையை வழங்க இது தொடர்ந்து புதுப்பிக்கப்படும் என்பதை உறுதிபடுத்துகிறோம்”  என அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாண்டவ் வெப் சீரிஸ் விவகாரம்: இந்து மதத்தை இழிவு செய்வதா? – நீதிபதி கடும் கண்டனம்

“இந்தியாவின் சட்டங்களை மதிப்பதோடு, அதன் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையையும் பார்வையாளர்களின் நம்பிக்கைகளையும் மதிக்கும் அதே வேளையில் படைப்பாளர்களுடன் இணைந்து பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை தொடர்ந்து உருவாக்குவோம்” என அமேசான் கூறியுள்ளது.

அப்பாஸ் அலி ஜாஃபர் இயக்கிய தொடரில் நடித்தவர்களும் குழுவினரும் இது தொடர்பாக இரண்டு முறை மன்னிப்பு கோரியதோடு, எதிர்ப்பிற்குரிய காட்சிகளை நீக்க விருப்பமும் தெரிவித்திருந்தனர்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்