Aran Sei

‘பஞ்சாப் தேர்தலுக்கு பாஜகவுடன் கூட்டணி’ – காரணங்களை அடுக்கும் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்

பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு அமரீந்தர் சிங் வைத்த ஒரே நிபந்தனை விவசாயிகள் போராட்டத்திற்கு தீர்வு காண வேண்டும் என்றும் அப்பிரச்சினை தீர்ந்துக்கொண்டிருப்பதால் அவரின் புது கட்சி பாஜகவுடன் கூட்டணி வைக்கும் என்றும் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி குறித்து, நேற்று(நவம்பர் 30), என்டிடிடிவி செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள அமரீந்தர் சிங், “நான் ஏற்கனவே ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கூட்டணி குறித்து பேசியுள்ளேன். வரும் சனிக்கிழமை(டிசம்பர் 4), பாஜக தலைவரை சந்திப்பேன் என நம்புகிறேன். விரைவில் முறையான அறிவிப்பை நீங்கள் எதிர்பார்க்கலாம்” என்று இலைமறை காயாக கூறியுள்ளார்.

வலதுசாரிகளுக்கு சாவர்க்கர் தேவைப்படுவது ஏன்? – வரலாறும் விளக்கங்களும்

மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்யப்பட்டதோடு, விவசாயிகள் எழுப்பிய பிற பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதால், பாஜகவுடன் தற்போது முறையான கூட்டணியை உருவாக்க முடியும் என்று அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

அமரீந்தர் சிங்கிற்கு ஆதரவாக சட்டபேரவை உறுப்பினர்கள் யாரும் இல்லை என்ற காங்கிரஸ் கட்சியின் கருத்தை நிராகரித்துள்ள அவர், பல காங்கிரஸ் சட்டபேரவை உறுப்பினர்கள் தன்னுடன் சேர ஆர்வமாக உள்ளதாகவும், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வரும் வரை அவர்கள் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

2020இல் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 5,579 – ஒன்றிய அமைச்சர் தகவல்

பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவுக்கு எந்த ஆதரவும் இல்லை என்றும் பாஜகவுடன் கூட்டணி வைத்து சட்டபேரவைத் தேர்தல் களமிறங்கி, அமரீந்தர் சிங் தனது சொந்த மதிப்பை குறைத்துக்கொள்கிறார் என்று கூறிய பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னியின் கூற்றை மறுத்துள்ளார்.

“இன்றைய நிலவரப்படி, பஞ்சாப்பில் பாஜகவிற்கு ஒரு பெரும் ஆதரவு அலை உருவாகி வருகிறது. பல இந்துக்கள் பாஜகவையும் எனது கட்சியையும் ஆதரிக்கின்றனர். பஞ்சாபில் 36 விழுக்காடு இந்துக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியை விட அவ்வாக்குகளை அதிகமாக நாங்கள்தான் வெல்லப் போகிறோம். விவசாயிகளிடமிருந்தும் எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம்” என்று பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Source: NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்