Aran Sei

ஆளூர் ஷாநவாசுக்கு பாஜகவினர் கொலை மிரட்டல் – கைது செய்யக்கோரி காவல்துறையில் புகார்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுசெயலாளரான ஆளூர் ஷாநவாசுக்கு பாஜகவினரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஆளூர் ஷாநவாசு தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.

அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் படுகொலை – குற்றவாளிகளை உடனடியாக கைது செய்க : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

இந்நிலையில், ஆளூர் ஷாநவாசுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பாஜகவினர் முகநூலில் பதிவிட்டுள்ளனர்.

அந்தப் பதிவில், “தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது” என்று குறிப்பிட்டு, “உங்கள் அனைவருக்கும் வெற்றி பரிசாக ஆளூர் ஷாநவாஸ் மரண செய்தி விரைவில் வரும் என நினைக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தனி சின்னத்தில் நின்று அங்கீகாரமா? பெரிய கட்சி சின்னம் என்ற ஆதாயமா? – தேர்தலில் சிறிய கட்சிகளின் நிலை

இதனைத்தொடர்ந்து, கொலை மிரட்டல் விடுத்த பாஜகவினரை கைது செய்யக்கோரி தமிழக காவல்துறையினரிடம் இணைய வழியில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

https://www.facebook.com/haamith.raseen/posts/3694108824034087

தஞ்சாவூரைச் சேர்ந்த ஹமீத் ரசீன் என்பவர் இது தொடர்பாக புகார் அளித்துள்ளதாக, தமிழக காவல் துறையின் இணையதளத்தில் பதிவாகியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்