Aran Sei

கொரோனா பரவலை தடுக்க 25 வயது ஆனவர்களுக்கு தடுப்பூசி – பிரதமருக்கு உத்தவ தாக்கரே கடிதம்

கொரோனா பரவலை தடுக்க 25 வயது ஆனவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதிக்குமாறு பிரதமர் மோடிக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கோரிக்கை வைத்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு எழுதியிருக்கும்  கடிதத்தில் அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில், அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களுடனான பிரதமரின் வீடியோ சந்திப்பின் போது, ​​45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போட அனுமதிக்குமாறு அளித்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டமைக்கு தாக்கரே நன்றி தெரிவித்தார்.

ரஃபேல் ஒப்பந்தம் – இந்திய இடைத்தரகருக்கு 8.62 கோடி ரூபாய் ‘அன்பளிப்பாக’ கொடுக்கப்பட்டது – அறிக்கை

”கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் மாநிலங்கள் பரவலை தடுக்கவும், மக்களைப் பாதுகாக்கவும், அந்த மாநிலங்களில் உள்ள 25 ஆனவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இளம் மற்றும் உழைக்கும் மக்களில் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம், நோய் பரவலின் தீவிரத்தையும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையையும் கணிகமாக குறைக்க முடியும்” என அந்தக் கடிதத்தில் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

மும்பை, தானே, புனே, நாசிக், நாக்பூர் அவுரங்காபாத் ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள  45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்று வாரங்களில் தடுப்பூசி செலுத்த உதவும் வகையில் 1.5 கோடி கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமரை உத்தவ் தாக்கரே கேட்டுக் கொண்டுள்ளார்.

Source : The Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்