Aran Sei

‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லமறுத்த இந்து சிறுவன் – தாக்கிய பாஜக தொண்டர்

மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்ல மறுத்த 10 வயது சிறுவனை பாஜக தொண்டர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

’ஜெய் ஸ்ரீ ராம் சொல்லு’ : போனில் பதிவான கொலையாளிகளின் குரல்

பாஜகவில் அந்தப்பகுதியின் பெண்கள் பிரிவின் தலைவராக உள்ள மிது பிரமணிக்கின் கணவர் மஹாதேப் பிரமணிக் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லமறுத்த சிறுவன் மஹதேவ் ஷர்மாவை கொடூரமாகத் தாக்கியுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹாதேப் பிரமணிக்  அந்தப்பகுதியில் டீக்கடை நடத்தி வருவதாகவும் , சிறுவன் மஹாதேவ் ஷர்மாவின் தந்தை திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் உள்ளதாகவும் தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு வங்க தேர்தலில் “ஜெய் ஸ்ரீராம்” முழக்கத்திற்கு தடை விதிக்க வேண்டும் – உச்சநீதிமன்றத்தில் மனு

இந்நிலையில், சிறுவன் ஷர்மா அந்த டீக்கடையின் பக்கமாகச் சென்றபோது அந்தச் சிறுவனை அழைத்த பிரமணிக் அவனை ஜெய் ஸ்ரீ ராம் என்று சொல்லுமாறு வற்புறுத்தியுள்ளார். அப்போது ஜெய்ஸ்ரீராம் என்று சிறுவன் சொல்ல மறுத்து அவரை “வங்கம் வாழ்க” என்று கூற சொல்லிய நிலையில் கோபமடைந்த  பிரமணிக், அந்தச் சிறுவனைக் கடுமையாகத் தாக்கியுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடுமையான தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்