Aran Sei

பெகசிஸ் விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும்; பாதிக்கப்பட்டவர்கள் ஏன் கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை – உச்சநீதிமன்றம் கேள்வி

credits : the new indian express

பெகசிஸ் ஸ்பைவேரால் வேவு பார்க்கப்பட்டவர்கள் விவகாரத்தில் ’உண்மை வெளிவர வேண்டும்’ என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வேவு பார்க்கப்பட்டது தொடர்பாக ஊடகங்கள் வெளியான தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவை தீவிரமானவை என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பெகசிஸ் விவகாரத்தில் விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா மற்றும் சூர்யகாந்த் அடங்கிய அமர்வு இதனை தெரிவித்துள்ளது.

மூத்த பத்திரிகையாளர் என். ராம், எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா, மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் மற்றும் 5 ஊடகவியலாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், மனுக்களின் நகலை ஒன்றிய அரசுக்கு வழங்குமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டனர்.

அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஒத்திவைத்த நீதிபதிகள், விசாரணையின் போது ஒன்றிய அரசின் சார்பில் யாராவது ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர்கள் அரசுக்கு முறையான அறிவிப்பை வெளியிடவில்லை. அவர்கள் வெளியடாததற்கு காரணம், வழக்கறிஞர் மனோகர் லால் சர்மா தாக்கல் செய்த மனுவில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரையும் தனிநபர்களாக குறிப்பிட்டுள்ளார்.

”பல பிரச்னைகள் உள்ளன… எந்த மனுக்களுக்கு நாம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்பதை நாம் கவனிக்க வேண்டும். சிலர் டெலிகிராப் சட்டத்திற்கும் சவால் விடுத்துள்ளனர்… இது தேவையற்ற சிக்கல்” என நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

மனுக்களின் பெரும்பான்மையானவை வெளிநாட்டு ஊடகங்களில் வெளியான தகவல்களை அடிப்படையாக கொண்டவை, இதை தவிர விசாரணைக்கு உத்தரவிட கோரும் வகையில் ”சரிபார்க்கக்கூடிய தகவல்கள்” எதுவும் உள்ளாதா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

”மனுக்கள் செவி விழியான தகவல்களை அடிப்படையாக கொண்டவை என்று நாங்கள் கூறவில்லை, எந்த பொருளும் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், சர்வதேச தரவுகளை நீங்கள் அணுகும் போது நீங்கள் அதிகம் முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டாமா?” என தலைமை நீதிபதி ரமணா கேள்வி எழுப்பினார்.

மேலும், “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக வேவு பார்க்கப்பட்டதாக கூறிப்பட்டுள்ளது. ஏன் தற்போது திடீரென்று வருகிறீர்கள்?. இரண்டு ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?” என அவர் கேட்டார்.

”பாதிக்கப்பட்டவர்கள் ஏன் கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டடு உங்களுக்கு தெரிந்தால், நீங்கள் ஏன் புகார் அளிக்கவில்லை” என தலைமை நீதிபதி வினவினார்.

தலைமை நீதிபதியின் முதல் கேள்விக்கு பதிலளித்த என். ராம் மற்றும் சஷி குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில், “பெகசிஸ் மென்பொருள் அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே விற்கப்பட்டுள்ளது என்பதை அமெரிக்காவின் கலிபோன்றியா நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. இது இறையாண்மை பாதுகாப்பு என்ற என்.எஸ்.ஓ நிறுவனத்தின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது” என குறிப்பிட்டார்.

நீதிபதியின் இரண்டாவது கேள்விக்கு பதிலளித்த மாநிலங்களவை உறுப்பினர் பிரிட்டாஸ் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மீனாக்‌ஷி அரோரா, “2019 ஆம் ஆண்டில் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டது. அப்போது அங்கீகரிக்கப்படாத இடைமறிப்பு இல்லை என்று அமைச்சர் கூறினார்” என தெரிவித்தார்.

ஜூலை 2021ல் தான் வேவு பார்க்கப்பட்டவர்கள் பெயர்கள் வெளியானது என எடிட்டர்ஸ் கில்ட் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.யூ.சிங் வாதிட்டார்.

இது தனிநபர் வேவு பார்க்கபட்ட விவகாரம் அல்ல என தெரிவித்த மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவான், தலைமை நீதிபதியின் மூன்றாவது கேள்விக்கு பதிலளித்தார். அதில், இந்த கண்காணிப்பின் தீவிரம் மிகப்பெரியது. இது உயர்ந்த மட்டத்தில் ஒரு சுயாதீன உண்மை கண்டறியும் அமைப்பை உருவாக்க வேண்டிய பிரச்னையாகும்” என அவர் குறிப்பிட்டார்.

”பெகசிஸ் ஒரு முரட்டு தொழில்நுட்பம். இது முற்றிலும் சட்டவிரோதமானது. இது எங்களுக்கு தெரியாமலே எங்கள் செல்போன் வழியாக எங்கள் வாழ்க்கையில் ஊடுருவுகிறது. அது கேட்கிறது, பார்கிறது, எங்களின் ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்கிறது. இது இந்திய குடியரசின் அரசியலமைப்பு வழங்கியுள்ள தனியுரிமை மற்றும் தனிப்பட்ட கண்ணியத்தை அழிக்கிறது” என கபில் சிபில் தெரிவித்தார்.

மேலும், “இது நமது தேசிய இணைய கட்டமைப்பை சிதைக்கிறது மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது… அரசாங்கத்திற்கு தயவுசெய்து நோட்டீஸ் அனுப்புங்கள். அவர்கள் நேரில் ஆஜராகி, இந்தியாவிற்கு பெகசிஸ் ஏன்?, எப்படி ஊடுருவியது என்பதை விளக்கமளிக்கட்டும். கண்காணிப்பு பற்றி தெரிந்திருந்தால், ஏன் வழக்கு பதியப்படவில்லை என்பதை அரசாங்கம் தெரிவிக்கட்டும். இந்திய அரசு ஏன் அமைதியாக இருந்தது? ” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெகசிஸ் மூலம் ஒரு செல்போனை ஆராய 55 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வரை ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய கபில் சிபில், “என்.எஸ்.ஓ குழுமம் அதன் தொழில்நுட்பம் பயங்கரவாதம் மற்றும் குற்றங்களை எதிர்த்து போராட பயன்படுகிறது என்று கூறிகிறது. அப்படியென்றால் ஊடகவியலாளர்கள் அனைவரும் தற்போது பயங்கரவாதிகள்” என கூறினார்.

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்