Aran Sei

கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது – மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்

த்திரபிரதேச மாநிலத்தில் கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டதாக கூறப்படுவதில் கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன் பொய் கூறிவருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த பியுஷ் கோயல், கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என கூறியுள்ளார்.

புகாரை விசாரித்த உத்திரபிரதேச காவல்துறையினர், பயணிகளின் சான்றுகளைச் சரிபார்த்த பின்பு அவர்களை அனுப்பி வைத்தனர். அவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் புகார் ஆதாரமற்றது என பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

நிலமோசடியை தடுக்க நிலங்களுக்கு 14 இலக்க அடையாள எண் – மத்திய அரசு அறிவிப்பு

இந்தச் சம்பவம்குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக மாநிலக் குழு மற்றும் பிற மாநிலப் பிரிவினர் உத்திரபிரதேச அரசை அணுகியுள்ளனர்.

சிறுபான்மையினரை சமாதானப்படுத்த முயற்சி செய்ய இந்த விவகாரத்தில் வாக்குவங்கி அரசியலில் கேரள முதல்வர் ஈடுபடுகிறார் என பியுஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார்.

“என் விமர்சனம் முதலமைச்சரை காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன்” – ஆ.ராசா

கேரளாவில் குடியுரிமை (திருத்தம்) சட்டம் முக்கிய பிரச்சினை அல்ல என்பதால் பா.ஜ.க. அதுகுறித்து பேசாது. கேரளாவில் யாரையும் காயப்படுத்த மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவது, இந்துக்களை துன்புறுத்துவது போன்ற அரசியல் நடவடிக்கைகளைக் கேரள அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று பியுஷ் கோயல்  குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்