Aran Sei

கோவிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாக இந்துத்துவவாதிகளின் வழக்கு – தொல்லியல் ஆய்வுக்கு தடைவிதித்த அலகாபாத் நீதிமன்றம்

வாரணாசியில் உள்ள கோவிலை இடித்து விட்டுக் கயன்வாபி மசூதி  கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து நேரடி ஆய்வு மேற்கொள்ளத் தொல்லியல் துறைக்கு உத்தரவிட்ட விரைவு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

மேலும், கயன்வாபி மசூதி குறித்த விரைவு  நீதிமன்றத்தின்  விசாரணைக்கும் தடைவிதித்து நீதிபதி பிரகாஷ் பாடியா தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கடந்த மார்ச் 8 அன்று, வாரணாசி நீதிமன்றம் கயன்வாபி மசூதியானது  கோவிலை இடித்துவிட்டு கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து  நேரடி  களஆய்வு மேற்கொள்ள  தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

1664 ஆம் ஆண்டு முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் இந்துக் கோவிலை இடித்து விட்டு அப்பகுதியில் கயன்வாபி மசூதியைக் கட்டினார் என்று கூறி  வாரணாசி நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவுக்குத் தடைவிதித்து  அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்