Aran Sei

உத்திரப்பிரதேசத்தில் 120 தேச துரோக வழக்கில் 94 வழக்குகள் ரத்து – என்.எஸ்.ஏ சட்டத்தை அரசு தவறாகப் பயன்படுத்துவதாக உயர்நீதிமன்றம் குற்றச்சாட்டு

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை (என்.எஸ்.ஏ) உத்திரபிரதேச அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்திருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காவல்துறை மற்றும் நீதிமன்ற ஆவணங்களை ஆய்வு செய்ததில், ஜனவரி 2018 முதல் 2020 டிசம்பர் வரையிலான காலத்தில்  பதியப்பட்ட 120 வழக்குகளில் 94 வழக்குகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த வழக்குகளில் அதிகபட்சமாக 41 தேச துரோக வழக்குகள், பசுவதை தொடர்பாகப் பதியப்பட்டிருப்பதாகவும், இந்த வழக்குகள் அனைத்தும் சிறுபான்மையினர் மீது பதியப்பட்டிருக்கிறது என தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

தொழிலாளர் உரிமைகளுக்காக போராடிய ஊழியர்கள்- பணிநீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

இதில் 70 விழுக்காட்டிற்கு அதிகமான சுமார் 30 வழக்குகளை நீதிமன்றம் ரத்து செய்திருப்பதாகவும், மீதமிருக்கும் 11 வழக்குகளில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 நீதிபதிகள் கொண்ட அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட 10 அமர்வுகள் இந்த வழக்குகளை விசாரித்திருப்பதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

என்.எஸ்.ஏ வழக்குகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கும் நிலையில், சட்டம் பயன்படுத்துதல் குறித்த மறு ஆய்வு அவசியமா என்ற கேள்விக்கு உத்திரபிரதேச தலைமை செயலாளர் ஆர்.கே. திவாரி பதிலளிக்க மறுத்துவிட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்