Aran Sei

உத்திரபிரதேச மருத்துவர் கபீல் கானுக்கு எதிரான இரண்டாவது பணியிடை நீக்க உத்தரவு – தடை விதித்த அலகாபாத் உயர்நீதிமன்றம்

த்திரபிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவர் கபீல் கானுக்கு எதிரான இரண்டாவது பணியிடை நீக்க உத்தரவிற்கு அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

பஹ்ரைச் மாவாட்ட மருத்துவமனையில் கட்டாயமாக நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்தது மற்றும் அரசின் கொள்கைகளை விமர்சித்ததற்காக ஜூலை 31, 2019 ஆம் தேதி, அவர் இரண்டாவது முறையாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.

முன்னதாக, கோரக்பூரின் பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரியில், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 60 குழந்தைகள் உயிரிழந்தது சம்பவத்தின்போது அவர் முதல்முறையாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

கபீல் கான் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த நீதிபதி சரல் ஸ்ரீவத்சவா, ”கபீல் கான் மீதான விசாரணையை ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

மனுதாரர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும், அவர் அவ்வாறு செய்யாவிட்டால், அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன் விசாரணையை முடிக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

நவம்பர் 11 ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிமன்றம், இது தொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

ஜூலை 31, 2019 ஆம் தேதி இடைநீக்கம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையில், விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என மனுதாரர் தரப்பில் இருந்து வாதிப்பட்டது.

மனுதாரர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பதால், இரண்டாவது பணியிடை நீக்க உத்தரவுக்கு அவசியம் இல்லை. மேலும், இது போன்ற உத்தரவு வழங்க மாநில அரசுக்கு அனுமதியில்லை என மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டார்.

அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது, உரையாற்றியது தொடர்பாக கபீல் கான் மீது பதியப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளை ரத்து செய்து கடந்த வாரம் அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : The Wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்