Aran Sei

‘உங்கள் மருத்துவ கட்டமைப்புக்கு ராமர் தான் கருணை காட்ட வேண்டும்’: உத்தர பிரதேச அரசை வறுத்தெடுத்த உயர்நீதிமன்றம்

credits : THE WIRE

ராமர் கோயில் கட்டுமானத்தைப் பெருமிதமாக கூறும் அரசின் மருத்துவ கட்டமைப்பே ராமரை நம்பி தான் உள்ளது என்று தி குவிண்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில், நேற்றைய தினம், 2,63,533 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,52,28,996 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனா நோய்த் தொற்றால் 2,78,719 பேர் மரணமடைந்திருப்பதாகவும், நேற்றைய தினம் மட்டும் கொரோனாவால் 4329 பேர் மரணமடைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 2,15,96,512 பேர் மீண்டு வந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட சந்தோஷ் பாபு எனும் நபர், மருத்துவமனையின் கழிப்பறையில் மயங்கி விழுந்து மரணமடைந்ததாகவும், அவருடைய உடல் மருத்துவமனை நிர்வாகத்தால், அடையாளம் தெரியாதவரின் உடல் போல வெளியனுப்பபட்டுள்ளது என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘ஊடகங்களிடம் அதிகம் பேசினால் தேசதுரோக வழக்கு பாயும்’ : அச்சம் தெரிவிக்கும் பாஜக எம்எல்ஏ

இது தொடர்பான வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ”மீரட் போன்ற மாநகரங்களில் இருக்கும் மருத்துவ கல்லூரியின் கட்டமைப்பே, இவ்வாறு இருக்கிறது என்றால், சிறு சிறு கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கும் இந்த மாநிலத்தில் மொத்த மருத்துவ கட்டமைப்புக்கும் ராமர் தான் கருணைக் காட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

‘கொரோனா இரண்டாம் அலையில்  270 மருத்துவர்கள் தொற்றால் உயிரிழப்பு’ – இந்திய மருத்துவர்கள் சங்கம் தகவல்

கொரோனா பரிசோதனைகள் மிக குறைந்த அளவிலே நடைபெறகிறது என்றும் தடுப்பூசிகளை மாநில அரசே உற்பத்தி செய்யாமல் இருப்பது ஏன்? என்றும் நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.

‘பாலஸ்தீனர்களின் கண்ணியத்தையும் எதிர்ப்பதற்கான உரிமையையும் பறிக்கக்கூடாது’ – அருந்ததிராய் உள்ளிட்ட எழுத்தாளர்கள் கூட்டமைப்பு கருத்து

மாநிலத்தின் மருத்துவ கட்டமைப்பு இவ்வளவு மோசமாக இருக்கும் சூழலில் கொரோனா மூன்றாவது அலை வருவதற்கான வாய்ப்புள்ளது என்று கூறிய நீதிமன்றம், கொரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளையும் மாநில அரசிடம் அளித்துள்ளதாக தி குவிண்ட் கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்