Aran Sei

தன்பாலின ஈர்ப்பு திருமணம்: சட்டத்தை சுட்டிக்காட்டிய பெண்கள் – கலாச்சாரத்தை மேற்கோள்காட்டி நிராகரித்த நீதிமன்றம்

ங்களது திருமணம் இந்து திருமணச் சட்டத்திற்கு எதிரானது அல்ல என்றும் அதனால், எங்களது திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோரி இரு பெண்கள் தாக்கல் செய்துள்ள மனுவை, இந்திய கலாச்சாரத்தை மேற்கோள் காட்டி அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அப்பெண்களின் மனுவை எதிர்த்து வாதிட்டுள்ள உத்தரப் பிரதேச மாநில அரசின் வழக்கறிஞர், ஒரே பாலின திருமணம் இந்திய கலாச்சாரம் மற்றும் இந்திய மதங்களுக்கு எதிரானது என்றும், இந்திய சட்டங்களின் கீழ் அது செல்லாது என்றும் தெரிவித்துள்ளார்.

தனது 23 வயது மகளை 22 வயது பெண் ஒருவர் சட்டவிரோதமாக சிறைப்பிடித்து வைத்துள்ளதைக் கோரி அஞ்சு தேவி என்பவரால் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

Love is Love: தன்பாலின திருமணத்திற்கு ஒப்புதல் வழங்கிய சிலி நாடாளுமன்றம்

ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று மனுவை விசாரித்த நீதிமன்றம், அடுத்த விசாரணையின் போது இரு பெண்களும் ஆஜராக வேண்டும் என்று மாநில அரசின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது.

இரண்டு பெண்களும் ஏப்ரல் 7 ஆம் தேதி நீதிபதி சேகர் குமார் யாதவின் முன்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

“நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். இந்து திருமண சட்டம் ஓர்பாலின ஈர்ப்பு திருமணத்தை எதிர்க்கவில்லை. ஆகவே, எங்களது திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும்” என்று நீதிமன்றத்தில் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து வாதிட்டுள்ள மாநில அரசின் வழக்கறிஞர்,  “இந்து கலாச்சாரத்தில், திருமணம் என்பது புனிதமான ஒன்றாகும். இது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடப்பது. நமது நாடு இந்திய கலாச்சாரம், மதங்கள் மற்றும் இந்திய சட்டங்களின்படி இயங்குகிறது. இந்தியாவில் திருமணம் புனிதமான கலாச்சாரமாக கருதப்படுகிறது, மற்ற நாடுகளில் திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம் மட்டுமே” என்று கூறியுள்ளார்.

தம்பதிகளாக அறிவிக்க தன்பாலின ஈர்ப்பாளர்கள் தொடுத்த வழக்கு: சமூகத்திற்கு பயன்படும் தீர்ப்பு வழங்குவேன் – நீதிபதி கருத்து

இரு பெண்களின் கோரிக்கையை நிராகரித்துள்ள அலகாபாத் நீதிமன்றம், அப்பெண்ணின் தாயான அஞ்சு தேவியின் ஆட்கொணர்வு மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது.

இந்தியாவில் திருமணம் என்பது இரண்டு தனிநபர்கள் இணைவது மட்டுமல்ல, உயிரியல் ரீதியாக ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான ஒரு இணைவு என கூறி, தன்பாலின ஈர்ப்பு திருமணத்தை ஒன்றிய அரசு எதிர்த்திருந்தது.

தன் பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி, நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

Source: PTI

H Raja-வை எப்போ கைது செய்ய போறீங்க

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்