Aran Sei

மசூதி இடிப்பு குறித்து நேர்காணல் அளித்தவர்மீது வழக்கு – நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்றம் அறிவிப்பு

credits : financial express

த்திரபிரதேசத்தில் பாரபங்கி மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக நேர்காணல் அளித்ததற்காக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய முடியாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மே மாதம், ராம் ஸ்நேகி காட் பகுதியில் உள்ள மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக தி வயர் இணையதளத்திடம் நேர்காணல் அளித்ததற்காக, மசூதியின் செயலாளர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

இதனை ரத்து செய்யுமாறு, குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் ரமேஷ் சிங் மற்றும் நரேந்திர குமார் ஜோஹாரி அடங்கிய அமர்வு, “மசூதியின் செயலாளர் முகமது அனீஸ் மற்றும் குடியிருப்பு வாசி முகமது  நமீம் இருவரும் தேவைப்படும் பட்சத்தில், முன்ஜாமின் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளை ரத்து செய்ய முடியாது” என தெரிவித்தனர்.

காணொளியை பகிர்ந்தது தொடர்பாக தி வயர் இணையதளம் மற்றும் அதன் இரு ஊடகவியலாளர்கள் மீதும் ஜூன் 24 ஆம் தேதி காவல்துறையினரால் வழக்கு பதியப்பட்டது.

‘தமிழ்நாட்டில் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் இல்லையென்பது தமிழுக்கு செய்யும் துரோகம்’ – எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்

அந்த காணொளியில் மசூதி சட்டவிரோதமாக இடிக்கப்பட்டது குறித்தும், இடிப்பிற்கு வழிவகுத்த சம்பவங்கள் குறித்தும் அதற்கு பிறகான சம்பவங்கள் குறித்தும் அந்தப் பகுதி மக்கள் கூறியிருந்தனர்.

தி வயர் இணையதளத்தின் ட்விட்டர் பதிவுகள், ’சமூகத்தில் விரோத போக்கை’ பரப்புவதாகவும்,’ மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும்’ வகையிலும் இருந்ததாக உத்திரபிரதேச காவல்துறையின் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த 14 மாதங்களில் தி வயர் இணையதளம் மீது உத்திரபிரதேச காவல்துறையினர் பதிவு செய்திருக்கும் நான்காவது முதல் தகவல் அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி கலவரத்தில் முகநூலின் பங்கு என்ன என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் கவனிக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் கருத்து

வழக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேசத்துரோகம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் சொல்லப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்து ’ஏற்றுக் கொள்ள முடியாதவை’ என்றும், முதல் தகவல் அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பவை ஆதாரமற்றவை என்றும் வாதிட்டார்.

முதல் தகவல் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், மனுதாரர்கள் எப்போது வேண்டுமானாலும் காவல்துறையினரால் கைது செய்யப்படலாம் என்பதால், அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச சட்டபேரவை தேர்தலில் போட்டியிடும் ஆசாத் சமாஜ் கட்சி ’ – ’பீம் ஆர்மி’ சந்திரசேகர் ஆசாத் அறிவிப்பு

மேலும், இந்திய அரசியலைமைப்பு வழங்கியிருக்கும் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கான உத்திரவாத உரிமையை, பதிவு செய்யப்பட்டிருக்கும் முதல் தகவல் அறிக்கை மீறுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : Bar and Bench

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்