Aran Sei

‘குற்றவாளிகளைக் காப்பாற்றும் காவல்துறை’ – காவல்நிலைய மரண வழக்கை சிபிஐ க்கு மாற்றி உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதி மன்றம்

த்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் பகுதியில் காவல் நிலையத்திலேயே இளைஞர்  மரணித்தது தொடர்பான  வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்றி அலகாபாத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் காவல்துறை குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக ஆதாரங்களை அழிப்பதாகவும் நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த வழக்கில் நீதி தவறாது முறையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென அஜய் குமார் யாதவ் என்பவர் தாக்கல் செய்த மனுவை  விசாரித்த நீதிபதிகள் எஸ்.பி. கேசர்வானி மற்றும் பியூஷ் அகர்வால் தலைமையிலான அமர்வு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணா யாதவ் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், அவரைப் பார்க்கக் காவல்நிலையம் விரைந்த அவரது தம்பியைப் பார்க்கக் காவலர்கள் அனுமதி மறுத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 12 அன்று கிருஷ்ணா யாதவ்  உயிரிழந்து விட்டதாக  காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சில காவல்துறையினர் மீது பிரிவு 302 ன் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறையின் முழு முயற்சியும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாவே அமைந்துள்ளது.   இந்த நோக்கத்திற்காக முக்கியமானச்  சான்றுகள் கைவிடப்பட்டு,  சில ஆதாரங்கள் உருவாக்கப்பட்டு திரிக்கப்பட்டுள்ளன  என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எனவே, இந்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Source: THE WIRE

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்