‘பசுப் பாதுகாப்பு இந்துக்களின் அடிப்படை உரிமை’ மற்றும் பசுப்பாதுகாப்பிற்காகச் சட்டம் இயற்றப்பட வேண்டுமென அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும்,ஒன்றிய அரசு பசுவைத் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டுமெனவும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் கூறியுள்ளார்.
பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவரின் பிணை மனு மீதான விசாரணையின்போது நீதிபதி சேகர் குமார் யாதவ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த பிணை மனுவையும் நிராகரித்துள்ளார்.
இந்த மனுமீதான விசாரணையின்போது பேசிய நீதிபதி சேகர் குமார் யாதவ், “பசு மட்டும் தான் ஆக்சிஜனை சுவாசித்து ஆக்சிஜனையே வெளியிடுகிறது என்று அறிவியலாளர்களின் நம்பிக்கை” என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அரண்செய்- யிடம் பேசிய தமிழ்நாடு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா”மாடுகளை தேசிய விலங்காக அறிவிக்க அறிவுறுத்துவதற்கு நீதிபதிக்கு என்ன தேவை இருக்கிறது” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆர்எஸ்எஸ், பாஜகவின் கொள்கையைச் சட்டப்பூர்வமாக்கும் முயற்சி. கடந்தகாலங்களில் பசுப்பாதுகாப்பு என்கிற பெயரால் நடந்த வன்முறைகளையும் கொலைகளையும் நாம் நினைவுகூர வழியே இதன் ஆபத்தைப் புரிந்துகொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.
source: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.