Aran Sei

பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய H.ராஜா- மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் கண்டனம்.

த்திரிகையாளர்களையும் பத்திரிகை நிறுவனங்களையும்  இழிவுபடுத்தும் வகையில் பேசிய பாஜக தேசிய செயலாளர் H.ராஜா மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும், அனைத்து ஊடக நிறுவனங்களும் H.ராஜாவை புறக்கணிக்க வேண்டுமெனவும் கோரியுள்ளது.

திரையில் வெளியாகவிருக்கிற ருத்ர தாண்டவம் படத்தின் முதற்காட்சியைப் பார்த்ததற்கு பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த H.ராஜா, பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் மிகவும் கீழ்தரமாக  பேசி இருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், “செய்தியாளர் சந்திப்பின் போது பத்திரிகையாளர்களையும் பத்திரிகை நிறுவனங்களையும் தரம் தாழ்ந்து மிகக்கீழ்தரமாக பேசியுள்ள H.ராஜாவை வன்மையாக கண்டிக்கிறோம். அனைத்து ஊடக நிறுவனங்களும் H.ராஜாவை புறக்கணிக்க வேண்டும் மற்றும் அவர்மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”. என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்