Aran Sei

‘இஸ்லாமியர்களை தாக்குபவர்கள் இந்துத்துவத்திற்கு எதிரானவர்கள்’ – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

ந்தியர்கள் நைவரும் ஒரே மரபணுவைக் கொண்டவர்கள் வழிபாடு முறையைக் கொண்டு அவர்களை வேறுபடுத்த முடியாது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த இந்திரேஷ் குமார் தலைமை வகிக்கும் இஸ்லாமிய ராஷ்ட்ரிய மஞ்ச் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இதை பேசியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”முதலில் இந்துஸ்தானி; முதலில் இந்துஸ்தான்” என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடைபெற்ற விழாவில், முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுடன் தொடர்புடைய டாக்டர் குவாஜா இப்திகார் முகமது எழுதிய தி மீட்டிங் ஆஃப் மைண்ட்ஸ்  : எ பிரிட்டிஷ் இனிஷியேட்டிவ் என்ற புத்தகம் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் மீதான கும்பல் வன்முறைக்கு இந்துத்துவ சிந்தனையே காரணம் – ஆர்.எஸ்.எஸ் தலைவரின் கருத்துக்கு அசாதுதீன் ஒவைசி பதிலடி

இந்து முஸ்லிம் ஒற்றுமை தவறாக வழிநடத்தப்படுகிறது, ஏனெனில் வேறுபாடே இல்லாத ஒன்றில் ஒன்றுபடுவதற்கு எதுவும் இல்லை என மோகன் பகவத் பேசியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இஸ்லாம் ஆபத்தில் இருக்கிறது என்ற மாயைக்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள். இஸ்லாமியர்கள்மீது தாக்குதல் நடத்துபவர்கள் இந்துத்துவாவிற்கு எதிரானவர்கள். சில சம்பவங்களில் தாக்குதல் நடத்தியதாக பொய்யாக வழக்கு பதியப்பட்டுள்ளது” என அவர் பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

‘உத்தரகண்ட்டிற்கு முதலமைச்சர் வேண்டுமா? யோகி ஆதித்யநாத்தை எடுத்துக்கொள்ளுங்கள்’ – அகிலேஷ் யாதவ்

”நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். இந்துக்களோ இஸ்லாமியர்களோ ஆதிக்க செலுத்த முடியாது. இந்தியாவில் இந்தியர்கள் மட்டுமே ஆதிக்க செலுத்த முடியும்” என மோகன் பகவத் பேசியிருப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்