Aran Sei

இஸ்ரேல் வீரருடன் போட்டியிட மறுத்த அல்ஜீரிய ஜூடோ வீரர் – இடைநீக்கம்  செய்து உத்தரவிட்ட சர்வதேச ஜூடோ சம்மேளனம்

ஸ்ரேல் வீரருடன் போட்டியிட மறுத்த அல்ஜீரிய வீரர் ஃபெதி நூரினை போட்டியில் இருந்து வெளியேற்றிச் சொந்த நாட்டிற்கு திரும்பி அனுப்பி நிலையில், அவர் இடைநீக்கம் செய்து  சர்வதேச ஜூடோ சம்மேளனம்(ஐஜேஎஃப்) உத்தரவிட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் 2020 போட்டி  நடைபெற்று வருகிறது. இதில் 73 கிலோ எடைப்பிரிவு ஜூடோ போட்டியின் இரண்டாவது சுற்றில் இஸ்ரேலின் தோஹர் புட்பூலுக்கு எதிராக களமிறங்க அல்ஜீரியாவின் ஃபெதி நூரின் மறுத்துவிட்டார். இதனால் அவரை ஒலிம்பிக் போட்டியில்  இருந்து வெளியேற்றிய ஒலிம்பிக் நிர்வாகம், அவரை சொந்த நாட்டிற்கு திரும்பி அனுப்ப முடிவு செய்தது.

வன்கொடுமைகளைத் தடுக்க மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவை திருத்தி அமைக்க வேண்டும்- முதலமைச்சருக்கு திருமாவளவன் வேண்டுகோள்

இந்நிலையில் ஃபெதி நூரின் மற்றும் அவரது பயிற்சியாளர் அமர் பெனிக்லெஃப் இருவரையும் ஐஜேஎஃப் இடைநீக்கம் செய்துள்ளது.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”இருவரின் நடத்தையும் எங்களின் தத்துவத்திற்கு எதிராக உள்ளது. நாங்கள் கடுமையான பாரபட்சமற்ற கொள்கையைக் கொண்டுள்ளோம். முக்கிய கொள்கையான ஒருமைப்பாடு, ஜூடோ மதிப்புகளால் வலுப்படுத்தப்படுகிறது” என தெரித்துள்ளது.

சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தனியார் மயமாகாது – ரயில்வேதுறை அமைச்சர் உறுதி

அவர்மீதான நடவடிக்கைகளை ஒழுங்கு நடவடிக்கை ஆணையம் முடிவு செய்யும் என ஐஜேஎஃப் கூறியுள்ளது.

இடைநீக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக பேசிய ஃபெதி நூரின், “நாங்கள் ஒலிம்பிக்ஸை அடையை நிறைய உழைத்தோம். ஆனால், பாலஸ்தீன ஆதரவு எல்லாவற்றையும் விடப் பெரியது” எனக் கூறினார்.

டெல்லியில் தகர்க்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயமும் இந்தியக் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களும் – அ.மார்க்ஸ்

போட்டியில் இருந்து விலகியது குறித்து தெரிவித்த நூரினின் பயிற்சியாளர் அமர் பெனிக்லெஃப், “நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் இல்லை. நாங்கள் ஒரு இஸ்ரேலிய வீரரை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால், நாங்கள் விலகிக் கொண்டோம். நாங்கள் சரியான முடிவை எடுத்துள்ளோம்” என தெரிவித்தார்.

இஸ்ரேலிய வீரருடன் போட்டியிட மறுத்து போட்டியில் இருந்து நூரின் போட்டியில் விலகுவது இது முதல் முறையல்ல. இஸ்ரேலிய வீரருடன் போட்டியிட மறுத்து, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : The Guardian

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்