Aran Sei

பாலஸ்தீனர்கள் கேட்பது சுய உரிமையையும் சொந்த நாட்டையும்தான் – தென் ஆப்பிரிக்கா குடியரசு தலைவர் கருத்து

ஸ்ரேலின் இலக்கை அடையும் வரை பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல் தொடருமென இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு அறிவித்துள்ளதாக அல்-ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலியப்படையினர் 10 நாட்களாகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை பாலஸ்தீனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலி எண்ணிக்கை 227 ஆக அதிகரித்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.

இஸ்ரேல் நடத்திவரும் மனிதஉரிமை மீறல்களை விசாரிக்க வேண்டும் – சர்வதேச நீதிமன்றத்திற்கு பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சர் கடிதம்

மேலும், இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து அமைதியை ஏற்படுத்தும் விதமாக செயல்படவிருந்த ஐக்கிய நாடு அவையின் பாதுகாப்பு குழுவை அமெரிக்க அரசு தடுத்துள்ளதாகவும், பொதுவில் தெரிவிக்கும் கருத்துகள் பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளதாக அல்-ஜசீரா செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதல்குறித்து தெரிவித்த தென் ஆப்பிரிக்க குடியரசு தலைவர் சிறில் ராமபோசா,” பாலஸ்தீனர்கள் தங்கள் சுய நிர்ணய உரிமையே கோருகிறார்கள், தங்கள் சொந்த நாட்டைக் கேட்கிறார்கள். தங்கள் சொந்த விவகாரத்தையும், சுதந்திரத்தோடு செயல்படுவதையும் விரும்புகிறார்கள். யாராலும் கட்டுப்படுத்தப் படுவதை அல்ல” என்று தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறந்த தாயின் அருகில் உயிருடன் கண்டெடுக்கப்பட்ட 5 மாதக்குழந்தை – இஸ்ரேல் தாக்குதலின் பேரவலம்

மேலும், இஸ்ரேல் குறித்து தெரிவித்த அவர், இஸ்ரேல் பாலஸ்தீனர்களின் உரிமையைப் பறிப்பதாகவும், பாலஸ்தீன பகுதியில் தாக்குதல் நடத்தி வருவதாகவும், இஸ்ரேல் ஒரு இனவெறி நாடு என்று ஒருவர் எளிதாக அடையாளப் படுத்த முடியும் என்று சிறில் ராமபோசா கூறியுள்ளதாக அல்-ஜசீரா செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து தெரிவித்துள்ள அல்-ஹக் என்கிற மனித உரிமை அமைப்பு, “மக்கள் அதிகம் வாழக்கூடிய பாலஸ்தீனத்தின் காசா பகுதியில், தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் குற்றங்கள்குறித்து செய்தி வெளியிடும் ஊடகங்களின் கட்டிடங்கள்மீது, கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் தாக்குதல் நடத்தப்படுகிறது” என்றும், மேலும், இதுகுறித்து சர்வதேச நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்