Aran Sei

சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்தால் மின்ணணு வாக்கு எந்திரம் ஒழிக்கப்படும் – அகிலேஷ் யாதவ்

credits : the indian express

த்தர பிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைத்த பின்னர், மின்ணணு வாக்கு இயந்திரத்தின் மூலம் வாக்களிக்கும் முறை ஒழிக்கப்படும் என்று, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆளும் மாநிலமான உத்தர பிரதேசத்தில், 2022 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஜான்சி மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த, சமாஜ்வாதி கட்சியின் தலைவர், அகிலேஷ் யாதவ், ”மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரங்களை யாரும் நம்பவில்லை. சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் கூட வாக்குச் சீட்டுக்களின் மூலம் வாக்களிக்கும் முறை தான் கடைபிடிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை வெகு நாட்கள் நடைபெற்றது. மக்கள் வாக்குச்சீட்டுக்களின் மூலம் வாக்களிக்கும் முறையையே நம்புகிறார்கள். ஆனால் இந்த சண்டையை இப்போது நடத்த முடியாது” என்று கூறியுள்ளார்.

தீஷா ரவி கைது – அகிலேஷ் யாதவ், ஜிக்னேஷ் மேவானி, சசி தரூர், கவிதா கிருஷ்ணன் கண்டனம்

மேலும், ”நாங்கள் பயிற்சி முகாம்கள் மூலம் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். குறைந்தபட்சமாக சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அனைத்து தொண்டர்களும் வாக்களித்தாலே, பாஜக தோற்கடிக்கப்பட்டு விடும். சமாஜ்வாதி தலைமையில் அரசாங்கம் அமைக்கப்படும் போது, சமாஜ்வாதிகள் தான் முதன்முதலாக மின்ணணு வாக்கு இயந்திரங்கள் மூலம் வாக்களிக்கும் முறையை ஒழித்தவர்களாக இருப்பார்கள்” என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட கலவரத்திற்கு பாஜகவே காரணம் – சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், ”பீகார் சட்டமன்ற தேர்தலில் நடைபெற்றதை போல உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் நடக்க வாய்ப்பில்லை. பீகாரில் உருவான மகா கூட்டணியை பாஜக சீர்குலைத்தது. உத்தர பிரதேசத்தில் பாஜக பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்கும். சமாஜ்வாதி கட்சி 350 இடங்களை கைப்பற்றும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

‘பாஜக தரும் கொரோனா தடுப்பூசியை நான் எப்படி நம்ப முடியும்?’ – அகிலேஷ் யாதவ்

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பல்வேறு வண்ணங்களில் தொப்பி அணிந்திருப்பதை குறிப்பிட்டு, சட்டமன்றம், நாடக கம்பெனி போல் மாறி இருப்பதாக கூறியிருந்ததை சுட்டிக்காட்டி பேசிய அகிலேஷ் யாதவ், ”நாங்கள் அணிந்திருக்கும் சிவப்பு வண்ண தொப்பி புரட்சியையும், ரத்தமும் சதையுமான உணர்ச்சியையும் குறிக்கிறது. ஆனால் முதல்வருக்கு இது போன்ற உணர்வுகள் கிடையாது” என்று சாடியுள்ளார்.

ஹத்ராஸ் வழக்கில் உத்தரபிரதேச அரசின் பொய் அம்பலமாகியுள்ளது – அகிலேஷ் யாதவ்

”பாஜக ஜனநாயகத்தை படுகொலை செய்ய நினைக்கிறது” என்று குற்றம் சாட்டிய அகிலேஷ், உத்தர பிரதேசத்தின் சட்டமேலைவையில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்