உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை உத்தரகண்டிற்கு மாற்றுவது நல்லதாக அமையும் என்றும் இதனால் அம்மாநிலத்தின் நிலவும் தலைமை மாற்றத்தில் ஏற்படும் தினசரி பிரச்சினை தீர்வுக்கு வரும் என்றும் உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரகண்ட் முதலமைச்சராக பதிவியேற்று நான்கு மாதங்கள் கூட ஆகாத நிலையில், தீரத் சிங் ராவத் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் மார்ச் மாதத்தில் திரிவேந்திர சிங் ராவத்துக்கு பதிலாக பதவியேற்றிருந்தார். புஷ்கர் சிங் தாமி புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில், இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அகிலேஷ் யாதவ், “உத்தரபிரதேசத்தில், முதலமைச்சரால் (யோகி ஆதித்யநாத்) இம்மாநிலத்தின் ஜனநாயகமே காயமடைந்துள்ளது. உத்தரகண்டில் நிலவும் உறுதியற்ற தன்மைக்கு ஜனநாயகம் பலியாகிவிட்டது. இச்சூழலில், உபி முதலமைச்சரை பாஜக உத்தரகண்டிற்கு மாற்றுவது நல்லதாக அமையும். இதனால் அம்மாநிலம் நிலவும் தலைமை மாற்றத்தில் ஏற்படும் தினசரி பிரச்சினை தீர்வுக்கு வரும்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு, வேலையின்மை, மோசமான சுகாதார கட்டமைப்பு போன்றவை இரு மாநிலங்களும் பிரச்சனைக்கு உள்ளாகியுள்ளன. ஆட்சி கட்டில் அரசியல் காரணமாக இரு மாநிலங்களில் முதலீடுகள் எதுவும் பெறப்படவில்லை. இருமாநிலங்களிலும் பெண்கள் மரியாதையுடன் வாழ்வது கடினமான ஒன்றாகிவிட்டது. மேலும், விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.” என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Source; pti
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.