“சுடுகாடுகளில் இடமில்லை, மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை” என்றும், “அரசு செவிடாகவும் ஊமையாகவும் மாறிவிட்டது” என்றும் முன்னாள் உத்தரபிரதேச முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, நேற்று (ஏப்ரல் 19), அவர் வெளியிட்ட அறிக்கையில், “உத்தரபிரதேச பாஜக அரசு இன்னும் சம்பிரதாயமான அதிகாரிகள் கூட்டங்களை மட்டும் நடத்தி வருகிறது. மக்களின் உயிரை பற்றியும், பிரச்சினைகளை பற்றியும் கவலைப்படவில்லை. இந்த மாநிலத்தில் இதற்கு முன் இதுபோன்ற ஒரு உணர்ச்சியற்ற அரசு இருந்ததில்லை. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் செய்திகள் திடுக்கிட வைக்கின்றன. பரேலியில், கொரோனாவால் உயிரிழந்தவர்களை தகனம் செய்ய இடமில்லை. ஆக்ரா, காசியாபாத், கான்பூரிலும் இதே போன்ற மோசமான நிலைமை உள்ளது.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
“தலைநகர் லக்னோவிலும் நிலைமை பரிதாபகரமாக உள்ளது. அங்கு ஒருவரால், உயிர்போகும் தருவாயில் ஒரு ஆம்புலன்ஸ்ஸை பெறமுடியவில்லை. பாதிக்கப்பட்டர்களை மருத்துவமனைகளில் அனுமதிக்கவும் போதிய இடமில்லை. இதனால் மக்கள் உயிரிழக்க நேரிடுகிறது.” என்று அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “பாஜக தலைமையிலான அரசு உத்தரபிரதேச மாநிலத்தை மகிழ்விக்கும் விதமா இது? சுடுகாடுகளில் இடமில்லை; மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. அரசு செவிடாகவும் ஊமையாகவும் மாறிவிட்டது. அரசை விட்டு பாஜக வெளியேறி, மக்களின் உயிருடன் விளையாடுவதை நிறுத்துவது நல்லது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.