Aran Sei

‘உ.பி. தேர்தல் முடிவில் ‘போலி சாமியார்’ அகற்றப்படுவார்’ – அகிலேஷ் யாதவ்

க்கிம்பூர் கேரி வன்முறை குறித்து உத்தரபிரதேச அரசை கடுமையாக சாடியுள்ள மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ், பாஜக அரசானது விவசாயிகளுக்கு எதிரானது என்றும் விரைவில் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று கூறியுள்ளார்.

இன்று(அக்டோபர் 14), அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டபேரவை தேர்தலையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரத யாத்திரையை தொடங்கி வைத்து உரையாற்றியுள்ளார். அப்போது, “பாஜக தொண்டர்கள் தங்கள் வாகனங்களால் விவசாயிகளை நசுக்கி கொன்றிருக்கின்றனர். இந்த அரசு விவசாயிகளுக்கு எதிரானது. அவர்களின் உரங்களை திருடுகிறது. பூச்சிக்கொல்லிகளின் விலை உயர்வுக்கு பின்னால் இந்த அரசு உள்ளது. போலி பாபா விரைவிலேயே அகற்றப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.

‘காட்டுயிர் பாதுகாப்பில் அலட்சியம் காட்டும் ஒன்றிய அரசு’ – சதீஷ் லெட்சுமணன்

“இந்த அரசாங்கமானது பொதுமக்களை ஏமாற்றிவிட்டது. இந்த அரசாங்கத்தின் கீழ், பணவீக்கமும், வேலையின்மையும், ஊழலும் குற்றச்செயல்களும் அதிகரித்துள்ளது. சட்டம் ஒழுங்கு வீழ்ந்துள்ளது” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடும் என்றும் நாங்கள் எந்தத் தேசிய கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டுள்ளார்.

Source: ANI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்