சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களின் உரிமையைப் பெறுவது உறுதி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘காங்கிரசுக்குள் நிலவும் உட்கட்சி பூசல்’ – செயற்குழுவை கூட்ட கபில் சிபல் கோரிக்கை
”மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த விரும்பவில்லை. ஏனெனில், அதற்குப் பிற்படுத்தப்பட்டவர்கள் அவர்களின் உரிமைகளையும் தகுந்த மரியாதையையும் கோருவார்கள் என பாஜகவிற்கு தெரியும். இது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின மக்களின் மிகப்பெரிய கோரிக்கை” என அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.