உத்தரபிரதேச மாநில அரசு கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து கணக்கு காட்டியுள்ளதாகவும், உண்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், உத்தரப்பிரதேசத்தில் உள்ள 24 மாவட்டங்களில் 2020 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல், 2021 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையாக அரசு ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளதைக் காட்டிலும் 43 மடங்கு அதிகமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாநில சிவில் பதிவு முறை அமைப்பிடமிருந்து பெறப்பட்ட, தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், “உண்மையில் பாஜக அரசு இறப்பு எண்ணிக்கையை மறைக்கவில்லை, தன் முகத்தைத் தான் மறைத்துக்கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.