Aran Sei

‘அகில் கோகோய்க்கு ஊபா சட்டத்தின் கீழ் தண்டனையளிக்க முடியாது’ : பிணையை உறுதி செய்த கௌஹாத்தி நீதிமன்றம்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை நீக்கக் கோரி போராடிய வழக்கில் கைது செய்யப்பட்ட மனித உரிமைகள் மற்றும் விவசாயிகள் உரிமை செயல்பாட்டாளர் அகில் கோகோய்க்கு தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம் வழங்கிய பிணையை கௌஹாத்தி நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இப்பிணையை ரத்து செய்யக்கோரிய, தேசிய புலனாய்வு முகமையின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வெறுப்பை பரப்பும் விதமான பேச்சுகள் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (ஊபா) கீழ் வந்தாலும், அச்செயலானது நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்பு மற்றும் இறையாண்மை  சீர்குலைக்கும் நோக்கத்தில் பயங்கரவாதச் செயலாக இருந்தால் மட்டுமே அது தண்டனைக்குரியதாகும் என்று கௌஹாத்தி நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

‘அசாமின் வளங்களை விற்று, நம்மை டெல்லியின் காலடியில் தள்ளிய பாஜகவை தோற்கடியுங்கள்’ – சிறையிலிருந்து அழைப்புவிடுத்த அகில் கோகோய்

மேலும், கோகோயை ஒரு பயங்கரவாத செயலைச் செய்த முதன்மையான குற்றவாளியாகக் கருதுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களில் பங்கு வகித்ததற்காகக் கிருஷக் முக்தி சங்கிராம் சமிதி (கேஎம்எஸ்எஸ்) எனும் விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் அகில் கோகோய் மீது 13 வழக்குகள்  தேசிய புலனாய்வு முகமையால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய அகில் கோகோய் – பிணை வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

கடந்த அக்டோபர் மாதம், விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில் தேசிய புலனாய்வு முகமையின் சிறப்பு நீதிமன்றம் அகில் கோகோய்க்கு பிணை வழங்கியது.

மொத்தம் 12 வழக்குகளில் அவருக்குப் பிணை கிடைத்தாலும், ஒரு வழக்கில் மட்டும் இன்னும் பிணை கிடைக்காததால், அவர் சிறையில் உள்ளார்.

Source : Indian Express   

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்