ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பாகிஸ்தான் செல்லுமாறு இளைஞர் தாக்கப்பட்ட காணொளி தொடர்பாக ஐந்து பேரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அஜ்மீர் காவல்துறையினரின் தகவல்படி, இந்தச் சம்பவம் கடந்த வாரம் நடந்தது என்றும், இது தொடர்பாக ஐந்து பேரைத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
”ஆகஸ்ட் 20 ஆம் தேதி அந்தக் காணொளியைக் கண்டோம். இது தொடர்பான முதல் கட்ட விசாரணைக்குப் பிறகு, தாக்குதல் நடத்திய ஐந்து பேரைக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 151 கீழ் தடுப்பு காவலில் அடைத்துள்ளோம்.” என அஜ்மீர் தெற்கு வட்ட அதிகாரி முகேஷ் குமார் சோனி கூறியுள்ளார்.
மேலும், “இந்த சம்பவம் சுபாஷ் நகர் பகுதியில் உள்ள ராம்கஞ்ச் காவல்நிலையத்தின் கீழ், நான்கு நாட்களுக்கு முன்பு நடைபெற்று உள்ளது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நாங்கள் பாதிக்கப்பட்டவர்களைத் தேடினோம். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் ஒரு இஸ்லாமியர்போல தெரிகிறது. அவர் வேறு மாநிலத்தில் இருந்து ராஜஸ்தான் வந்திருக்கலாம் என்று தெரிகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருநாள் காவலுக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள், பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என முகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
”குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்வதற்கு முன்பு, வகுப்புவாத சம்பவங்களை கையாளும் குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 108-ன் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரைக் கண்டறிய முடியாதததால், முதல் தகவல் அறிக்கை பதிய முடியவில்லை. அஜ்மீர் தர்காவிற்கு நாடு முழுவதும் உள்ள பல யாத்தீரிகர்கள் வருகின்றனர், அதில் இவர் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவராக இருக்கலாம்” என முகேஷ் குறிப்பிட்டுள்ளார்.
லலித் சர்மா, சுரேந்திரா, தேஜ்பால், ரோகித் சர்மா, சைலேந்திர டாங்க் ஆகிய ஐந்து பேரைக் கைது செய்யப்பட்டுள்ளனர் என ராம்காஞ்ச் காவல்நிலையத்தின் காவலர் கஜேந்திரா தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர் முன் வந்து புகார் தெரிவிக்கும் பட்சத்தில், வகுப்புவாத கலவரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதியப்படும் என முகேஷ் குமார் சோனி கூறியுள்ளார்.
Source : The Indian Express
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.