Aran Sei

‘பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம்’- தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

ல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லி நாடாளுமன்றத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அச்சங்கத்தின் மாநிலச் செயலாளர் சிஆர்.செந்தில்வேல் வெளியிட்ட அறிக்கையில், “ஒன்றிய அரசு எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நீலப் பொருளாதாரம் என்ற பெயரில் புதிய மசோதா அறிமுகம் செய்ய உள்ளது. இந்திய பெருங்கடலின் கனிம வளங்களை அயல்நாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சூறையாட வழிவகுக்கும் சட்டம்.  இதனை எதிர்த்து தமிழ்நாடு மீனவர் தொழிலாளர் சங்கம் சார்பில் அக்டோபர் 21 அன்று நாடாளுமன்றம் முன்னால்  மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளோம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியது டாடா சன்ஸ் குழுமம் – ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

“உலக வர்த்தக அமைப்பின் கட்டளைக்கு அடிபணிந்து இந்திய மீன்பிடித் தொழிலுக்கான மானியத்தை குறைக்கக்கூடாது. இந்திய கடல் மீன் வள மசோதா 2021 கொண்டு வரக் கூடாது. நாட்டுப் படகுகள் விசைப் படகுகள் உள்ளிட்ட சிறு வகை மீன்பிடித் தொழிலுக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்ட எரிபொருள் வழங்க வேண்டும். இந்திய கடல்பகுதியில் அன்னிய மீன்பிடி கப்பல்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகும் இலங்கை பாகிஸ்தான் பங்களாதேஷ் கடல் எல்லைப் பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை பாதுகாக்க இந்திய அரசு சம்பந்தப்பட்ட நாடுகளுடன் ராஜ்ய ரீதியில்  பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இந்திய கடல் பகுதியில் 61நாள் மீன்பிடி அமலில் உள்ள காலத்தில் பிறநாட்டு மீன்பிடி கப்பல்கள் இந்திய கடல் எல்லையில் சட்டவிரோதமாக மீன் பிடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். கடற்கரை சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து கடல்சார் நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கும் சாகர்மாலா திட்டத்தைக் கைவிட வேண்டும். 61 நாள் மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு ஒன்றிய அரசு நாடு முழுவதும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” என்ற கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளன.

லக்கிபூர் விவசாயிகள் மரணம் குறித்து மௌனம் ஏன் ? – பிரதமர் மோடிக்கு கபில் சிபல் கேள்வி

“மீனவர் சேமநல  நலத்திட்டங்களுக்கு கடல்சார் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு  ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். புயல் மழை உள்ளிட்ட பேரிடர் காலத்தில் மீட்பு மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு தமிழ் நாடு மீனவர் சொந்தங்கள் ஆதரவு தர வேண்டும்” என்று தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்