Aran Sei

‘மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுகிறேன்’ – ஜே.என்.யூ மாணவர் சங்க தலைவர் ஆயிஷி கோஷ் அறிவிப்பு

டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக் கழகத்தின் மாணவர் சங்க தலைவர் ஆயிஷி கோஷ் மேற்குவங்க தேர்தலில்  கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேட்பாளராகப் போட்டியிட உள்ளதாக  அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மேற்குவங்க மாநிலம் ஜமுறிய தொகுதியில் போட்டியிடுகிறேன் என்றும் என்னை சனியுக்த் மோர்ச்சா என்ற அமைப்பு ஆதரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 5, 2020 ஆம் ஆண்டு டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக் கழகத்தில் நடந்த மாணவர்கள் மீதான தாக்குதலில் ஆயிஷி கோஷ் முகம் தெரியாத குண்டர்களால் தாக்கப்பட்டார்.

மேலும், ஆயிஷி கோஷ் தற்போது ஜவர்ஹலால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்க தலைவராக உள்ளார். மேலும் தலைவராக உள்ளபோதே தேர்தலில் போட்டியிடும் முதல் நபரும் இவரே ஆவார்.

’டெல்லியில் ராமராஜ்யம் அமைக்க போராடி வரும் ஆம் ஆத்மி’ – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

கடந்த வருடம் ஆயிஷி கோஷ் தாக்கப்பட்டதிற்கு சில நாட்கள் கழித்து பேசிய ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கன்னையா குமார், “மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆயிஷி கோஷ் டெல்லி ஜே.என்.யூ வில் நல்ல வேலையைச் செய்துள்ளார். அவரைப் போன்ற இளைஞர்கள் மேற்குவங்க தேர்தலில் போட்டியிட வேண்டும்” என்றும் கூறியிருந்தார் என்று தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்