Aran Sei

இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வதாக மிரட்டிய சாமியாரை கைது செய்யுங்கள் – அகில இந்திய மாணவர் கழகம் போராட்டம்

“உங்கள் பெண்களை வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்து பாலியல் வன்கொடுமை செய்வேன்” என பேசிய உத்தரப் பிரதேச சாமியாரை கைது செய்யக் கோரி, அகில இந்திய மாணவர் கழகம் போராட்டம் நடத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் கைராபாத் நகரத்தில் நவராத்திரி விழாவையொட்டி ஊர்வலம் செல்லும் போது மசூதிக்கு முன்பு, “உங்கள் பெண்களை வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்து பாலியல் வன்கொடுமை செய்வேன்” என்று காவி உடை அணிந்த சாமியார் மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலானது.

அதைத் தொடர்ந்து, சாமியார்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

உத்தரபிரதேசம்: ‘உங்கள் சமூக பெண்களை பாலியல் வன்புணர்வு செய்வேன்’ – மசூதிக்கு முன்பு காவி உடை அணிந்த சாமியார் மிரட்டல்

வெறுப்பைப் பரப்பும் பேச்சு மற்றும் தரக்குறைவான கருத்துகளை பேசியது தொடர்பான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில மணி நேரங்களில், அவர் பேசும் ஒரு காணொளி இணையத்தில் வெளியானது. அக்காணொளியில், “நான் தவறாக பேசிவிட்டேன். என் பேச்சுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று மஹந்த் பஜ்ரங் முனி தாஸ் பேசியிருந்தார்.

இந்நிலையில், மஹந்த் பஜ்ரங் முனி தாஸை கைது செய்யக் கோரி, டெல்லியில் உள்ள உத்தரப் பிரதேச இல்லத்தில் நேற்று (ஏப்ரல் 10) அகில இந்திய மாணவர் கழகம் போராட்டம் நடத்தியுள்ளது.

இப்போராட்டத்தில் மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை  கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம்: இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வேன் என்று பேசிய சாமியார்மீது வழக்கு பதிவு

மறுபுறம், தங்களை கைது செய்யும்போது நடந்த கைகலப்பில் பலர் காயமடைந்ததாக அகில இந்திய மாணவர் கழகம் குற்றம் சாட்டியுள்ளது.

“போராட்டம் நடத்திய பெண்கள், இஸ்லாமியர் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டனர். மாலை 6 மணிக்குப் பிறகும், கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுவிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர். போரட்டக்காரர்களில் சிலர் நோம்பு கடைப்பிடிப்பவர்கள் ”என்று அகில இந்திய மாணவர் கழகம் கூறியுள்ளது.

Source: PTI

நாடாளுமன்றத்தில் சிரிப்பு காட்டிய OPSன் மகன்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்