Aran Sei

தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கியின் ஆதியோகி சிலை : கண்டனத்தை தொடர்ந்து மாற்றிய விமான நிலையங்கள் ஆணையம்

விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள ஆவணத்தில், தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் அதியோகி சிலை இடப்பெற்றிருப்பதற்கு எழுந்த கண்டனத்தை தொடர்ந்து, அதை நீக்கி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரம் வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (மே 13), மாநிலங்கள் வாரியாக தனிமைப்படுத்துதல் வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஆவணம் ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில், தமிழகத்தின் பாரம்பரிய சின்னங்கள் இடம் பெறுவதற்கு பதிலாக, கோவை மாவட்டம் ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை இடம் பெற்றிருந்தது.

‘பக்தர்கள் கையில் கோவில்’ என்பது ஜக்கியின் கருத்தல்ல, பாஜக கருத்து – கொளத்தூர் மணி

இதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோருடன், சமூக வலைதள பயனர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்ட தமிழ்நாட்டிற்கான தனிமைப்படுத்துதல் வழிகாட்டுதல் நெறிமுறைகளில் இடம்பெற்றிருந்த ஜக்கி வாசுதேவின் அதியோகி சிலை மாற்றப்பட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெற்கு கோபுரம் வெளியிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்