Aran Sei

மாவோயிஸ்டுகள் மீது ட்ரோன் மூலம் குண்டுவீசப்பட்டதாக குற்றச்சாட்டு: பொய் என மறுத்த இந்திய பாதுகாப்பு படை

னநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள அரசியல் கட்சிகள் தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என மாவோயிஸ்டுகள் வேண்டுகேள் விடுத்துள்ளதாக தி ஸ்டேட்ஸ்மேன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி, மாவோயிஸ்டுகளுக்கும் இந்திய பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 22  சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர், மாவோயிஸ்டுகள் தரப்பில் 16 பேர் உயிரிழந்தனர்.

மாவோயிஸ்டுகளின் தாக்குதலுக்கு எதிர்வினையாக, மாவோயிஸ்டுகள் பதுங்கி இருக்கும் இடங்கள் (சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதி) என பல்வேறு இடங்களில், இந்திய பாதுகாப்பு படையினர், ட்ரோன் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

மரணமடைந்த பாதுகாப்பு படை வீரர்களுக்கு இரங்கல்: ’எங்களது யுத்தம் காவலர்களுக்கு எதிரானது அல்ல’ – மாவோயிஸ்டுகள் அறிக்கை

இந்தப் பகுதி பல்வேறு பழங்குடியின மக்களின் வாழ்விடமாக இருந்தாலும், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால், மத்திய அரசு மீகவும் நவீனமான ஆயுதங்களையும், வான்வெளி மூலமான தாக்குதல்களை மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடத்தியுள்ளது என தி ஸ்டேட்மேன்  இணையதளத்தில் வெளியான செய்தி கூறுகிறது.

மஹாராஷ்ட்ராவில் மாவோயிஸ்டுகள் 5 பேர் சுட்டுக்கொலை – ‘நக்சல் வாரம்’ கடைபிடிக்கப்பட இருந்த நிலையில் நடவடிக்கை

இது தொடர்பாக, தண்டகாரன்யாவின் சிறப்பு மண்டல குழுவின் செய்தி தொடர்பாளர் விகல்ப், வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ”பிஜப்பூர் மாவட்டத்தில், நாங்கள் வசிக்கும் பெளத்தலங்கா மற்றும் பலகுடெம் கிராமங்களை, மத்திய மற்றும் மாநில அரசுகள் சிதைத்துள்ளன” என்று கூறியுள்ளார்.

“தோழர் ” என்கின்ற வார்த்தை மாவோயிஸ்டுகளை குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது : சிறப்பு நீதிமன்றம்

”பாதுகாப்பு படையினர் ட்ரோன்களின் மூலம் 12 குண்டுகளை எங்களின் தளங்களில் வீசி வெடிக்கச் செய்துள்ளனர். ட்ரோன்களின் நடமாட்டங்களை நாங்கள் முன் கூட்டியே கண்டறிந்ததால், எங்களின் தளங்களை வேறு பாதுகாப்பான இடத்துக்கு மாற்றிவிட்டோம்” என்று அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கொடைக்கானல் வனப்பகுதியில் ஆயுதப் பயிற்சி – மாவோயிஸ்டுகள் என குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை

மேலும், ”இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும்” எனவும் அந்தச் செய்தி குறிப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பீகார் : மூன்று மாவோயிஸ்டுகள் என்கவுண்ட்டரில் கொலை

இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்றிலுமாக மறுத்துள்ள பஸ்தரின் தலைமை காவலர் சுந்தர் ராஜ், மாவோயீஸ்டுகள் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று கூறியுள்ளார். மேலும், ”பஸ்தரில் வாழ்ந்து வரும் பூர்விக பழங்குடியின மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் ஒற்றை நோக்கத்துடன், சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு, பஸ்தரில் இருக்கும் பாதுகாப்பு படை செயல்பட்டு வருகிறது” என்றும் அவர் கூறியுள்ளதாக தி ஸ்டேட்ஸ்மேன் குறிப்ப்ட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்