Aran Sei

காற்று மாசுப்பாட்டால் அவதியுறும் டெல்லி மக்கள்: பொறுப்பற்று செயல்படுவதாக பாஜகவை குற்றஞ்சாட்டும் ஆம் ஆத்மி

காற்று மாசுபாடு குறித்து அக்கறையற்று இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி மத்திய பாஜக ஆட்சியின் மீது குற்றம் சாட்டியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு காற்று மாசுபாடு குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் செய்யவில்லை என்றும், டெல்லி மக்களின் உடல் நலன்குறித்து பொறுப்பற்று செயல்படுகிறது என்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ஆதிஷி தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டெல்லியில் கலைக்கப்பட்ட காற்று தர மேலாண்மை ஆணையம் – காலதாமதம்தான் காரணமா?

காற்று தர மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட ஐந்து மாதங்களிலே கலைக்கப்பட்டதை அடுத்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ஆதிஷி இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் ஆதிஷி, டெல்லி அரசு காற்று மாசைக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருதாகவும் ஆனால் மத்திய அரசு காற்று மாசுபாட்டினை குறைக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்றும் தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடைகாலத்தை எதிகொள்ள போராட்ட களத்தில் செங்கல் வீடுகள் – முடிவில்லா போராட்டம் நோக்கி விவசாயிகள்

மேலும் ” டெல்லிக்குவெளியே பஞ்சாப், பீகார், உத்தர பிரதேசம் போன்றபகுதிகளில் கற்று மாசை குறைக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது ” என்று கேள்வி எழுப்பியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விரிவாகப் பேசிய ஆதிஷி, டெல்லியின் 300 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் 13 அனல் மின்நிலையம் உள்ளதாகவும், இவை காற்று மாசுபாட்டிற்கு மிக முக்கியகாரணம் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாதல் – CO2 உமிழ்வுகளை குறைப்பதற்கான ஒப்பந்தத்தின் நிலை என்ன?

காற்று மாசுபாட்டினை கட்டுப்படுத்த மத்திய அரசு அமைத்த தர மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட ஆறு மாதங்களிலேயே சட்ட இயற்றப்படாமல் கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்