Aran Sei

ஏர் இந்தியா தனியார்மயமாக்கும் நடைமுறை இறுதி கட்டத்தில் உள்ளது – ஒன்றிய அரசு தகவல்

ர் இந்தியாவை தனியார்மயமாக்கும் நடைமுறை இறுதி கட்டத்தில் உள்ளது என முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறைத் செயலாளர் துஹின் கந்தா பாண்டே தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்குவதற்காக பலரிடம் இருந்து ஏலப் புள்ளிகள் பெறப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஏர் இந்தியாவை வாங்குவதற்கான ஏலத்தில், டாடா நிறுவனம் பங்கேற்று இருப்பதாக டாடா சன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

”ஏர் இந்தியாவை வாங்குவதற்காக பலரிடம் இருந்து ஏலப் புள்ளிகள் பெறப்பட்டுள்ளன. தற்போது இந்தச் செயல்முறை, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது” என முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறைச் செயலாளர் துஹின் கந்தா பாண்டே கூறியுள்ளார்.

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் 100 விழுக்காடு பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கப்பட்ட இந்த நடைமுறை கொரோனா தொற்றால் சிறிது தாமதமான நிலையில், நிறுவனத்தை வாங்குவதற்கான ஏலத் தொகையைக் கோருமாறு ஏப்ரல் 2021ல் ஒன்றிய அரசு அழைப்பு விடுத்தது.

Source : PSU Watch

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்