Aran Sei

சுட்டெரிக்கவுள்ள கோடை – போராட்டக் களத்தில் முன்னேற்பாடுகளை செய்யும் விவசாயிகள்

டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள், எதிர்வரும் கோடை வெயிலை சமாளிக்கும் விதமாக, சூரிய மின்சத்தியில் இயங்கும் குளிர் சாதன வசதியுடன் கூடிய டிராக்டர்களை களமிறக்கவுள்ளனர்.

கோடை காலத்தில், டெல்லியில் வெப்பநிலை 40 டிகிரிக்கும் மேல் செல்லும் வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது என்றும் இந்த பிப்ரவரியில் டெல்லியில் பதிவான சராசரி அதிகபட்ச வெப்பநிலையானது, 1901 ஆம் ஆண்டுக்கு பின்னான இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று (மார்ச் 1) தெரிவித்துள்ளது.

“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்

இந்நிலையில், இன்று (மார்ச் 2) மேன் அமன் சிங் சின்னா என்ற ஊடகவியலாளர் காணொளி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் விதமாக சூரிய மின்சக்தியில் இயங்கும் குளிர்சாதன பெட்டி, கை கழுவும் உபகரணம், சிறியளவிலான தண்ணீர் தொட்டி போன்றவை அடங்கிய ட்ராலியை (டிராக்டரின் பின்னால் இணைக்கப்படும் வண்டி) பற்றி அந்த காணொளியில் ஒருவர் விளக்கியுள்ளார்.

“இந்த ட்ராலி அறையில் பயன்படுத்தியிருக்கும் தரைவிரிப்பானது கனடாவிலும் இங்கிலாந்திலும் கிடைக்கக் கூடிய அரிதான தரைவிரிப்புகள். அறையின் உட்புறங்கள் தரமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணைய வசதி, கண்காணிப்பு கேமராக்கள், மேல் பகுதியில் சூரிய மின்சக்திக்கான சோலார் பேனல்கள் ஆகியவற்றுடன் இந்த ட்ராலி வர இருக்கிறது.” என்று காணொளியில் தெரிவித்துள்ளார்.

போராட்டம் நடைபெறும் இடத்தில் அரசு, தொடர்ந்து, மின் இணைப்புகளை துண்டித்து வருவதை சமாளிக்கும் விதமாக, சூரிய மின்சக்தி சாதனங்களை நிறுவியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘வெற்றியுடன் திரும்புவேன் என்ற அப்பா எங்கே?’ – 5 வயது மகனுடன் அப்பாவை தேடும் விவசாயி மகள்

ஏற்கனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களின் டிராக்டர்களிலும் வண்டிகளிலும் படுக்கைகள், போர்வைகள், சமையல்-மளிகை சாமான்கள், தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களுடன் சிறிய அளவிலான வீடுகளாக மாற்றி, அதில் தங்கி வருகின்றனர்.

குடியரசு தின டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறையை தொடர்ந்து, போராட்ட களங்களை, காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்