Aran Sei

‘ஒன்றிய அரசின் பிறப்பு, இறப்பு தகவல் களஞ்சியத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவர்’ – அசாதுதீன் ஓவைசி குற்றச்சாட்டு

சிறுபான்மையினர், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவில் உள்ள பெரும்பான்மையான மக்கள், பிறப்பு மற்றும் இறப்புகளின் ஒருங்கிணைந்த தரவுகளஞ்சியத்தை ஒன்றிய அரசு உருவாக்குவதால் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாஹதுல் முஸ்லீமின் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பேசியுள்ள அசாதுதீன் ஓவைசி, “ஒன்றிய அரசு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம்,1969-ஐ திருத்த விரும்புகிறது. இந்த திருத்தமானது ‘பதிவு செய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளின் ஒருங்கிணைந்த தரவுகளஞ்சியத்தை’ உருவாக்க ஒன்றிய அரசுக்கு வழி அமைத்துக்கொடுக்கும். ​​இப்பணி மாநில அரசுகளால் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், தற்போது ஒன்றிய அரசு இத்தகவல்களை சேகரிக்க அனுமதிக்கப்படுகிறது. மாநில அரசின் இந்த அதிகாரத்தை ஏன் ஒன்றிய அரசு பறிக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

‘தேசிய குடிமக்கள் பதிவேட்டை கொள்ளைப்புறம் வழியாக அமல் படுத்தும் ஒன்றிய அரசு’ – சிபிஎம் குற்றச்சாட்டு

“5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 38 விழுக்காடு பேருக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை. பிறப்பைப் பதிவு செய்தவர்களில் கூட, சிலருக்கு இன்னும் சான்றிதழ் கிடைக்கப் பெறவில்லை. முந்தைய தலைமுறையினர் பெரும்பாலானோர் மருத்துவமனைகளில் பிறக்காதவர்கள் என்பதால், பதிவு செய்யப்பட்ட பிறப்பு சான்றிதழ்களைப் பெறுவதற்கான வாய்ப்பு குறைவு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பணக்கார சமூகத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் கிட்டத்தட்ட 82.3 விழுக்காடு பேர் பிறப்புச் சான்றிதழைக் கொண்டுள்ளனர். ஆனால், ஏழைகளில் 40.7 விழுக்காடு குழந்தைகளிடம் மட்டுமே பிறப்புச் சான்றிதழ் உள்ளது. சிறுபான்மையினர், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவில் உள்ள பெரும்பான்மையான மக்கள், பதிவுசெய்யப்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளின் ஒருங்கிணைந்த தரவுகளஞ்சியத்தை உருவாக்குவதால் மிகவும் பாதிக்கப்படுவார்கள்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Source: New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்